9 ஆவது நாளாக வாழ்வாதார இயக்கப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
13 Jan 2026, 3:17 pm
<p><strong>9 ஆவது நாளாக வாழ்வாதார இயக்கப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>சேலம், ஜன.13- பணிப் பாதுகாப்பு வழங்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கப் பணியாளர் கள் மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கப் பணியாளர்கள் மாநிலம் முழுவதும் 9 ஆவது நாளாக போராட் டங்களில் ஈடுபட்டனர். பணி நிரந்தரம் செய்ய வேண்டும், வேலை நேரத்தையும் வரையறுக்க வேண்டும். ஊதியத்துடன் கூடிய மகப்பேறு மருத்துவ விடுப்பு வழங்க வேண்டும். அனைத்து பணியாளர் களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பி எம், பிசி ஆகிய பதவி களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்த்தி வழங்க வேண்டும். ஜிஎஸ்டி, சிஆர்பி கணக்காளர்க ளுக்கு மாத ஊதியம் ரூ 10,000 உயர்த்தி வழங்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் நகர்புற வாழ்வா தார இயக்க பணியாளர்கள் மற்றும் ஊராட்சி அளவிலான களப்பணியா ளர்கள் சங்கம் சார்பில் தமிழக முழுவ தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங் கள் முன்பு தொடர் போராட்டம் நடை பெற்று வருகிறது. அதன் ஒரு பகுதி யாக, செவ்வாயன்று சேலம் கோட்டை மைதானத்தில் இரண்டா வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்ட னர். நாமக்கல் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு போராட்டம் நடை பெற்றது. இப்போராட்டத்திற்கு சங்கத் தலைவர் ஐயப்பன் தலைமை வகித் தார். இந்திய தொழிற்சங்க மையத் தின் மாவட்டச் செயலாளர் ந. வேலு சாமி பேசினார். இதில், மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான பணி யாளர்கள் பங்கேற்றனர். தருமபுரி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு 9 ஆவது நாளாக நடைபெற்று வரும் போராட்டத் திற்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி. முத்துசாமி தலைமை வகித்தார். இதில் மாவட்ட அமைப்பாளர் பி.சிவ லிங்கம் பொருளாளர் என்.பிரதீப், அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் மீன் முருகன், ஏஐசிசி டியு மாநிலச் செயலாளர் சி.முருகன், மாநில நிர்வாகி கெ.கோவிந்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
