தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

21 Feb 2026, 4:39 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

“தமிழே நீ வாழ்ந்திடு” முதல்வர் ஸ்டாலின் உலகத் தாய்மொழி நாள் வாழ்த்து

சென்னை: நம் தாய்மொழியின் அவசியத்தை உணர்த்தும் வகையிலும், தாய்மொழிக்காக இன்னுயிர் நீத்தவர்களை நினைவுகூரும் வகையிலும் உலகத் தாய் மொழி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.  இதனையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டா லின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,  “தமிழே நீ வாழ்ந்திடு! இன்று உலகத் தாய்மொழிகள் நாள்! ஏராளமானோர் உயிர்கொடுத்துக் காத்த நம் உயிர் நிகர் தமிழ்மொழியை எத்தனை சிறப்புகள் சொல்லி அழைத்தாலும் ‘தமிழே’ என்று அழைத்திடும்போது கிடைத்திடும் இன்பம் மகத்தானது. தலைவர் கலைஞரின் இந்த வரிகளைப் பாடலாக்கிய அனைவரும் பாராட்டுக் குரியவர்கள். அவர்களுக்கு என் நன்றி! நம் தமிழைக் காத்து, அதை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டு  சேர்த்து, செழிப்போடு வாழவைக்க வேண்டியது உல கெங்கும் வாழும் அனைத்துத் தமிழர்களின் பொறுப்பு” என  தெரிவித்துள்ளார்.

‘பிரிய மனமில்லாமல் பிரிகிறோம்’: நாகைமாலி

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் கடைசி நாளான பிப்.20 அன்று சபை நிறைவு பெற்றது. முதல மைச்சர் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்து உரை யாற்றிய பின்னர், சட்டமன்ற கட்சித் தலைவர்கள் தங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழு  தலைவர் நாகை மாலி உரையாற்றுகையில், “பிரிந்தவர்கள் ஒன்று சேர்வதும், ஒன்று சேர்ந்தவர்கள் பிரிவதும் உணர்வு பூர்வமானதே” என்று கூறினார்.  தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  பேரவை தலைவர், மேலும், தன்னை இந்த சட்டப்பேர வைக்கு அனுப்பி வைத்த கீழ்வேளூர் தொகுதி மக்களுக்கும்,  தன்னோடு ஐந்தாண்டுகள் பயணித்த தோழர் எம். சின்ன துரை, கந்தர்வகோட்டை மக்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் துறைச் செயலாளர்கள், சட்டப் பேரவை இணைச் செயலாளர் மற்றும் அதிகாரிகள், அலு வலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்த தோடு பிரிய மனமில்லாமல் பிரிகிறோம் என்று தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.  காங்கிரஸ் மாநிலத் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, சிபிஐ சார்பில் டி.ராமச்சந்திரன், மதிமுக சதன் திருமலை குமார் உள்ளிட்ட பலரும் முதலமைச்சருக்கு வாழ்த்து தெரி வித்து சபையை நிறைவு செய்தனர்.

‘சமூக, பெண்ணுரிமைக்கான போராட்ட தேர்தல்’

தஞ்சாவூர்: 2026 சட்டப்பேரவை தேர்தல் என்பது சமூக, பெண்ணுரிமைக்கான போராட்டத் தேர்தல் என திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார். தஞ்சாவூரில், சனிக்கிழமை திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற மகளிரணி மாநாட்டில் அவர் பேசுகையில், “2026 தேர்தல் என்பது வாக்கு அளிக்கிற சாதாரண போராட்ட மல்ல, இது சமூக, பெண்ணுரிமைப் போராட்டம். ​எனவே எல்லோரையும் விட பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்குச் சலுகைகள் பல வந்துள்ளன. அப்படிப் பட்ட ஒரு ஆட்சி இருப்பதால் பல உதவித் தொகையை பெற்று உள்ளீர்கள். அதைவிட பெண்களுக்கு உரிமை மிக முக்கியம். இவையெல்லாம் ஒரு நொடிப்பொழுதிலே மாறி விடும். பெண்கள் எல்லா துறைகளிலும் தலைமை பொறுப்புக்கு வந்துள்ளனர். நூறு ஆண்டுகால சுயமரி யாதை கண்ட இயக்கம், 110 ஆண்டுகால நீதிக் கட்சி இயக்கம். எனவேதான் இந்த ஆட்சி மீண்டும் வர வேண்டும்.  இப்போது பெற்றிருக்கிற இந்த வாய்ப்பு, வருங்காலத்தில் நம்முடைய பேரப்பிள்ளைகளுக்குத் தொடர வேண்டும். அதைவிட வேகமாக வளர வேண்டும். மீண்டும் திமுக கூட்டணி தலைமையில் ஆட்சி அமைந்து, பெண்ணுரிமை பாதுகாக்கப்பட வேண்டும்” என்றார்.

ண்டாமை தான்’ உயர் நீதிமன்றம் கருத்து  சென்னை: ‘

ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் பொது மயானத்தை பயன் படுத்த அனுமதி மறுப்பது தீண்டாமைக்குச் சமம்’ என சென்னை உயர் நீதி மன்றம் கருத்து தெரி வித்துள்ளது. ஈரோடு மாவட்டம், கரு மாண்டி செல்லிப்பாளை யம் கிராமத்தில் உள்ள வண்டிப்பாதை நிலத்தை மயானமாக மாற்றக் கோரியும், மயானம் என வரையறுக்கப்பட்ட இடத்தில் உடலை அடக்கம்  செய்வதை உறுதி செய்யக் கோரியும் வழக் குகள் தாக்கல் செய்யப் பட்டன. இந்த வழக்கை விசா ரித்த நீதிபதி வி.லட்சுமி நாராயணன், சர்ச்சைக் குரிய நிலம் 70 ஆண்டுகளாக அருந்ததி யர் சமூகத்தினரால் மயானமாக பயன்படுத்தப் பட்டு வருவதை சுட்டிக் காட்டினார். “வாழும் போது கண் ணியத்துடன் வாழ உரிமை உள்ளது போல, இறந்தவர்களுக்கு கண் ணியத்துடன் இறுதிச் சடங்கு செய்வதும் உரிமை” என்று தெரி வித்த நீதிபதி, மயானம் ஆக்கிரமிப்பற்று இருக்க  தேவையான நடவடிக்கை எடுக்கவும், சுற்றுச்சுவர் அமைக்கவும், கல்லறை களை சேதப்படுத்திய வர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவும்

இடமாறுதல் கலந்தாய்வு நடத்த கோரிக்கை

சென்னை: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் எம்ஆர்பி மூலம் சிறப்பு மருத்துவர்கள் பணி நியமனம் செய்யப்பட உள்ள நிலையில், மகப்பேறு துறையில் 57  மருத்துவர் பணியி டங்கள் காலியாக இருந்தும் இடமாறுதல் கலந்தாய்வு நடத்த வில்லை. மருத்துவக் கல்வி இயக்குநரிடம் கோ ரிக்கை விடுத்தும் இது வரை நடவடிக்கை இல்லை. எனவே, இந்த  விவகாரத்தில் சுகா தாரத் துறை அமைச்சர்  உடனடியாக தலை யிட்டு இடமாறுதல் கலந் தாய்வு நடத்த வேண்டும்  என அரசு மருத்துவர் களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவர்  மருத்துவர் எஸ். பெரு மாள் பிள்ளை வலி யுறுத்தியுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.