தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருப்பூரில் மின்-ஏலம் தொடர்பான நேரடி செயல்முறை விளக்க கூட்டம்

3 Jan 2026, 2:20 pm
திருப்பூரில் மின்-ஏலம் தொடர்பான நேரடி செயல்முறை விளக்க கூட்டம்
<p><strong>திருப்பூரில் மின்-ஏலம் தொடர்பான நேரடி செயல்முறை விளக்க கூட்டம்</strong></p> <p>திருப்பூர், ஜன.3- திருப்பூர் குமரன் சாலையில் உள்ள &nbsp;மாநாட்டு மையம் முதல் தள கூட்டரங்கில் &nbsp;வருவாய் இனங்களின் அனைத்து குத்தகை தாரர்களுக்கான நிறுவன அலுவலர் மூலம் மின்-ஏலம் தொடர்பான நேரடி செயல்முறை விளக்க கூட்டம் சனியன்று திருப்பூர் மாநக ராட்சி துணை ஆணையாளர் சுந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில், திருப்பூர் மாநகராட்சிக்கு சொந்தமான ஆண்டு குத்தகை இனங்களை (2026 ONLINE &nbsp;MODE OF 2029) வரையுள்ள மூன்றாண்டு காலத்திற்கு குத்தகைக்கு வடிவில் (MSTC-https://www.mstcecommerce.com/ E-Auction Services) நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், பி.என். சாலையில் அமைந்துள்ள &nbsp;புதிய பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகங்கள் நிறுத்துமிடத்தில் வாகனங்கள் நிறுத்த கட்ட ணங்கள் வசூலிக்கும் குத்தகை உரிமம். புதிய &nbsp;பேருந்து நிலையத்தினுள் தரை தள கடைகள் &nbsp;மற்றும் உணவகம் குத்தகை உரிமம். ஈஸ்வ ரன் கோவில் வீதியில் கட்டப்பட்டுள்ள 87 தின சரி பூ மார்கெட் கடைகளில் கட்டணம் வசூலிக் கும் உரிமம், 50 இரண்டு மற்றும் 17 நான்கு சக் கர வாகனங்கள் நிறுத்துமிடத்திற்கான கட்ட ணம் வசூலிக்கும் உரிமம். காமராஜ் சாலை &nbsp;முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பேருந்து நிலையம் அருகில் தரை மற்றும் நான்கு தளங்களில் கட்டப்பட்டுள்ள பல &nbsp;அடுக்கு இரண்டு மற்றும் நான்கு சக்கர வாக னங்கள் நிறுத்துமிடத்தில் கட்டணம் வசூ லிக்கும் உரிமம். கோவில்வழி பேருந்து நிலை யம் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங் கள் நிறுத்துமிடத்தில் வாகனங்கள் நிறுத்த கட் டணங்கள் வசூலிக்கும் குத்தகை உரிமம். கும ரன் சாலை மாநாட்டு மையத்தின் முன்புற முள்ள கட்டிடத்தின் தரை அடித்தளத்தின் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத் துமிடம். பின்புறம் தரை மற்றும் நான்கு தளங் களில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன &nbsp;நிறுத்துமிடம். தரைதளம் முதல் தளம் மற்றும் &nbsp;இரண்டாம் தளம் ஹால்கள் புட் கோர்ட். மாநக ராட்சி வெள்ளிவிழா பூங்கா நுழைவுக் கட்ட ணம் வசூலித்தல் மற்றும் ரெஸ்டாரெண்ட் கட்டணம் வசூலித்தல், ஐஸ்கீரீம் பார்லர் கட்ட ணம் வசூலித்தல், இரு சக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் கட்டணம் வசூலிக்கும் உரிமம் ஆகியவை ஏலம் விடப்படவுள்ளன. தற்போதுள்ள மாநகராட்சி வருவாய் இனங் களின் குத்தகைதாரர்களுக்கு மின் ஏலம் &nbsp;குறித்த செயல்முறை விளக்கம் மற்றும் அதன் &nbsp;பதிவு நடைமுறைகள், ஏலதாரர் பங்கேற்பு, ஏல இறுதி செய்தல் ஏலத்திற்குப் பிந்தைய &nbsp;முறைகள் மற்றும் ஏலத்தில் பங்கேற்பது தொடர்பாக டிஜிட்டல் தள பரிவர்த்தனைகள் போன்றவற்றில் நேரடி செயல்முறை விளக்க கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உதவி ஆணையாளர் பார்த்தசாரதி (மண்டலம்-3), மாமன்ற செய லாளர் அமுல்ராஜ் மாநகராட்சி அலுவலர்கள் &nbsp;உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.