தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

8 Feb 2026, 3:55 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

அரசு உதவி வழக்கறிஞர் தேர்வுக்கு திருப்பூரில் நேரடி பயிற்சி வகுப்பு

திருப்பூர், பிப்.8- அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க திருப்பூர் மாவட்டக் குழு சார்பில், அரசு உதவி வழக்கறிஞர் (ஏ.பி.பி) தேர்வுக்கு  ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. ஏ.பி.பி முதல் நிலை தேர்வு வரும் பிப்.15 ஆம் தேதியன்று  நடைபெற உள்ளது. இதற்கான நேரடி ஒரு நாள் பயிற்சி வகுப்பு  சனியன்று அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க திருப்பூர் மாவட்டக் குழு சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு, தென்னம்பாளையம் இளமுகில் வளாகத்தில் நடைபெற்றது.  இந்த வகுப்பில், மத்திய மற்றும் மாநில சிறு சட்டங்கள், உரிமையியல் நடைமுறை சட்டம் ஆகிய தலைப்புகளில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்த வகுப்பில் தேர்வு எழுதும்  20 வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். அகில இந்திய வழக்கறிஞர் சங்க தேசியக்குழு உறுப்பினர் பொன்ராம் இந்த  வகுப்பை துவக்கி வைத்தார். மூத்த வழக்கறிஞர் ஈ.என். கந்தசாமி வாழ்த்திப் பேசினார். மாவட்ட துணைத்தலைவர் தமயந்தி, மாவட்ட துணைச்செயலாளர் அமர்நாத் ஆகியோர் கலந்து கொண்டனர். பயிற்சி ஆசிரியர்களுக்கும், இடம்  வழங்கிய மூத்த வழக்கறிஞர்கள் ஈ.என்.கந்தசாமி, ஆகியோ ருக்கும், கலந்து கொண்டவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப் பட்டது.

வாக்காளர் பதிவு சிறப்பு பார்வையாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

திருப்பூர், பிப்.8- தமிழக மேற்கு மாவட்டங்களுக்கான சிறப்பு பார்வையாளர் குல்தீப் நாராயண் தலைமையில் திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் ஞாயிறன்று ஆலோசனைக்கூட்டம் நடை பெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டி யல் சிறப்பு தீவிர திருத்தம் - 2026 பணிகள்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த டிசம்பர் 19 அன்று  வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப் பட்டது. இதையடுத்து வாக்காளர்களிடமி ருந்து கடந்த மாதம் 30 ஆம் தேதி வரை  மனுக்கள் பெறப்பட்டது. இதில் திருப்பூர்  மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு  தீவிர திருத்தம்-2026 பணிகளின் போது பெறப் பட்ட கோரிக்கைகள் மற்றும் மறுப்புரைகள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற் றும் முரண்பாடுடைய தரவுகள் ஆகிய இனங் கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் விசா ரணை மற்றும் முடிவுகள் உள்ளிட்ட பணி களை பார்வையிட இந்திய தேர்தல் ஆணை யத்தால், தமிழ்நாடு மேற்கு மண்டலங்களை உள்ளடக்கிய மாவட்டங்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளராக நியம னம் செய்யப்பட்டுள்ள குல்தீப் நாராயண் தலைமையில், திருப்பூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மனீஷ் நாரணவரே அனைத்து வாக்கா ளர் பதிவு அலுவலர்கள் மற்றும் அனைத்து  உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுட னான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.  இதில், மாவட்ட வருவாய் அலுவ லர் க.கார்த்திகேயன், மாநகராட்சி ஆணை யாளர் எம்.பி.அமித், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மகாராஜ்,  வருவாய் கோட்டாட்சியர் (உடுமலைப் பேட்டை) குமார், (தாராபுரம்) சிவபிர காஷ், பெலிக்ஸ்ராஜா, உதவி ஆணையர் (கலால்) செல்வி, மாவட்ட வழங்கல் அலுவ லர் சரவணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கல்பனா, மாவட்ட ஆதிதிரா விடர் நல அலுவலர் சதீஸ் மற்றும் துறை  சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சிறுமியை வன்புணர்வு செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை

தேனி, பிப்.8- சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற் காக முதியவருக்கு ஆயுள் தண்டனை  விதித்து தேனி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது . பெரியகுளம் தென்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் காணிக்கை ராஜ்  (66)  என்ற முதியவர்.இவர் 2022 ஆம் ஆண்டு சாலையில் சென்று கொண்டிருந்த பத்து வயது சிறுமியை  அழைத்  துச் சென்று  வன்புணர்வில்  ஈடுபட்டதாக சிறுமியின் பெற்  றோர் பெரியகுளம் தெற்கரை காவல்  நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  இந்த வழக்கின் விசாரணை அறிக்கை தேனி மாவட்ட  போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமை முடிவுற்று முதியவர் காணிக்கை ராஜ்  குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டது. சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற் காக முதியவருக்கு ஆயுள் தண்டனையும், 25 ஆயிரம்  ரூபாய் அபராதம், அபராத தொகையை கட்ட தவறினால்  மேலும் ஒரு வருட கடுங்காவல்  சிறை தண்டனை விதித்து  போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கணேசன் தீர்ப்பளித்  தார். மேலும் சிறுமியின்  கல்வி மற்றும் எதிர்கால வாழ்விற்  காக தமிழக அரசு 7 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு  வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்  பிட்டுள்ளார்.

இயற்கை விவசாயத்தில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் விற்பனை மையம்

சிவகங்கை, பிப்.8- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகரில், வைகை ஆற்றங்கரையோரம் குலாலர் தெருவில் இயற்கை  விவசாயத்தில் உற்பத்தி செய்யப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் மையம் செயல்படத் தொடங்கியுள்ளது. இந்த மையத்தில் விற்பனை செய்யப்படும் அனைத்து  பொருட்களும் முழுமையாக இயற்கை விவசாய முறையில் உற்பத்தி செய்யப்பட்டவை என, கடையின் உரிமையாளர் பொன்னையா தெரிவித்துள்ளார்.  இயற்கை  விவசாயப் பொருட்களை விரும்பும் பொதுமக்கள் மற்றும்  ஆரோக்கிய உணவு தேடும் நுகர்வோரிடையே இந்த விற்பனை மையம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

பள்ளியில் ரூ.76 ஆயிரம் திருட்டு

திருவில்லிபுத்தூர், பிப்.8- திருவில்லிபுத்தூரிலிருந்து மல்லி செல்லும் சாலையில்  தைலா குளம் அருகே அமைந்துள்ள அரிமா இண்டர் நேஷனல் பள்ளியில், பிப்.4-ஆம் தேதி வழக்கம்போல் பள்ளி பணிகள் முடிந்த பின்னர், பணியாளர் தங்கமணி அலுவலக அறை மற்றும் ரெக்கார்டு அறையை பூட்டி, சாவியை காவலர் குருநாதனிடம் ஒப்படைத்துவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். அடுத்த நாள் பிப்.5 ஆம் தேதி காலை, பள்ளியின் கணக்காளர் செல்வலட்சுமி அலுவலக அறையின் கதவை திறக்க வந்தபோது, ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டி ருப்பதை கண்டுள்ளார். தொடர்ந்து அறைக்குள் சென்று பார்வையிட்ட போது, கட்டுமான பணிகளுக்காக வைக்கப்  பட்டிருந்த ரூ.20,000 மற்றும் ரெக்கார்டு அறையில் வைத்தி ருந்த ரூ.56,000 என மொத்தம் ரூ.76,000 பணம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து பள்ளியின் தாளாளருக்கு தகவல் தெரி விக்கப்பட்ட நிலையில், அவரது அறிவுறுத்தலின் பேரில்  பள்ளி முதல்வர் சிவக்குமார், பள்ளியின் சிசிடிவி காட்சி களை ஆய்வு செய்தார். அதில் அடையாளம் தெரியாத  2 நபர்கள் பள்ளிக்குள் நுழைந்து பணத்தை திருடிச்  சென்றது பதிவாகியிருந்தது. இதுகுறித்து போலீசார்  வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி  வருகின்றனர்.

மதுரை அரசுப்பள்ளி மாணவர்கள்  3 பேர் மலேசியாவிற்கு கல்விச் சுற்றுலா

மதுரை, பிப்.8- தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களின் கலைத்திறன், படைப்பாற்றல் மற்றும் தனித்திறன்களை ஊக்குவிக்கும் நோக்கில் ஆண்டுதோறும் கலைத்திருவிழா மற்றும் மன்றப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்போட்டிகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்கள் அரசு செலவில் வெளிநாட்டு கல்விச்சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லப்படுவது சிறப்பம்ச மாகும். அந்த வகையில், கடந்த கல்வியாண் டில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் மூவர், மலேசியா நாட்டிற்கு கல்விச் சுற்றுலாவாக பிப்.9 ஆம் தேதி பயணம் மேற்கொள்ள உள்ளனர். மதுரை வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த  மாணவி எம்.சாருலதா (தற்போது 8-ஆம் வகுப்பு) கவிதை எழுதும் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். அதே பள்ளியைச் சேர்ந்த மாணவி எஸ்.அமித்தா கதை சொல்லும் போட்டியில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து  சாதனை புரிந்துள்ளார். மேலும், மேலூர் அருகே குறிச்சிபட்டி அரசு நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவன் ஜி.பாலாஜி, வானவில் மன்றப் போட்டியில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். இந்த மூன்று மாணவர்களும் பிப்.9- ஆம் தேதி சென்னை விமான நிலையத்திலிருந்து மலேசியா நாட்டிற்கு கல்விச் சுற்றுலாவிற்காக புறப்பட உள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்கள் மாநில அளவில் சாதனை படைத்து வெளிநாட்டு கல்விச் சுற்றுலா செல்லும் இந்த நிகழ்வு, பிற மாணவர்களுக்கும் ஊக்கமாக அமைந்துள்ளது.

சுப்புராயன் மணி மண்டபம் பிப்.13 ஆம் தேதி திறப்பு

நாமக்கல், பிப்.8- ராசிபுரம் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் சுப்புராயன் நினைவு மணி மண்ட பத்தை பிப்.13 ஆம் தேதியன்று முதல்வர் திறந்து வைக்கவுள்ளதாக ராஜேஷ்குமார் எம்.பி., தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த புதுச்சத்திரம் பகுதியில், சென்னை மாகாண  முதலமைச்சராக இருந்த டாக்டர். பா.சுப்புரா யன் அவர்களின் மார்பளவு சிலை கூடிய மணி  மண்டபம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதனை மாநிலங்களவை உறுப்பினர் கே. ஆர்.என்.ராஜேஷ்குமார் சனியன்று ஆய்வு  செய்தார். இதன்பின் அவர் செய்தியாளர்க ளிடம் பேசுகையில், புதுச்சத்திரம் பகுதியை  சேர்ந்த சுப்புராயன், சென்னை மாகாணத் தின் முதலமைச்சராகவும், ஒன்றிய அமைச்ச ராகவும், மகாராஷ்டிரா ஆளுநராகவும் இருந் தவர். அவருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருந்தது. அதனையேற்று தமிழக அரசு சார்பில், ரூ. 3 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில், கடந்த 2 வருடமாக சுப்புராயன் நினைவு மணிமண்டபம் கட்டு மானப் பணி நடைபெற்று வந்தது. தற்போது 99  சதவீத பணிகள் முடிவு பெற்றுள்ளது. இதனை, பிப்.13 ஆம் தேதியன்று தமிழக முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சி வாயி லாக திறந்து வைக்கவுள்ளார், என்றார்.

நீதிமன்றத் தீர்ப்பின் மூலம்  விஜய்யின் ஊழல் ஒழிப்பு தெரிகிறது! கி.வீரமணி விமர்சனம்

தஞ்சாவூர், பிப்.8 -  உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் மூலம் விஜய் எந்த அளவுக்கு ஊழல் ஒழிப்பைச் சார்ந்தவர் என்பது தெரிந்து விட்டது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார். தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் அவர்  சனிக்கிழமை தெரிவிக்கையில், “விஜய் குறித்து உயர் நீதிமன்றம் சொல்லியிருக்கும் பதிலை பார்த்தால், அவர் எந்த அளவுக்கு ஊழல் ஒழிப்பைச் சார்ந்தவர் என்பதைப் புரிந்து கொள்ளலாம். அவர் தன்னுடைய வருமானத்தை மறைத்தார் என்பதற்காக ரூ.  1.50 கோடி அளவுக்கு அபராதம் விதித்து உள்ளனர். இதற்கு முன்பு, தான் ஒரு கார் வாங்கியதற்கு எந்த விதமான வரியும் கட்ட வில்லை என்பதற்காக வழக்கு தொடுத் தார். இந்த இரு வழக்குகள் மூலம் அவர்  ஊழல் ஒழிப்பில் எவ்வளவு சக்தி வாய்ந்த வர் என்பது தெளிவாகத் தெரிந்துவிட்டது. எந்தக் கொள்கையும் இல்லாமல், அவர் அரசி யல் நடத்தாமல், சூட்டிங்தான் நடத்திக் கொண்டிருக்கிறார். தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமை யில் அமைந்துள்ள திமுக கூட்டணி தொ டர்ந்து வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணி தர்க்கப்படியும் நடைமுறைப்படியும் பல மான கூட்டணியாக இருப்பதற்கு வாய்ப் பில்லை. எதிர்க்கட்சிக் கூட்டணியில் அடிக்கடி மோடியும், அமித் ஷாவும் தமிழ் நாட்டுக்கு வந்து போகின்றனர். ஒவ்வொரு முறையும் அவர்கள் வர வர திமுக கூட்ட ணிக்கு வாக்குகள் அதிகமாகிக் கொண்டிருக் கிறது” என்றார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.