தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தியாகி என்.வி நினைவிடத்தில் பொங்கல் வைத்த பட்டியலின மக்கள்

16 Jan 2026, 3:00 pm
தியாகி என்.வி நினைவிடத்தில்  பொங்கல் வைத்த பட்டியலின மக்கள்
<p><strong>தியாகி என்.வி நினைவிடத்தில் &nbsp;பொங்கல் வைத்த பட்டியலின மக்கள்</strong></p> <p>தஞ்சாவூர், ஜன.16- &nbsp;தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தெற்கு ஒன்றியம் ராயமுண்டான்பட்டி கிராமத்தில் உள்ள, தஞ்சாவூர் தியாகி என்.வி என அழைக்கப்படும், என்.வெங்கடாசலம் நினைவிடத்தில், பட்டியல் இன மக்கள், அவருக்கு மரியாதை செலுத்தி, பொங்கல் வைத்து, தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை உற்சாகமாகக் கொண்டாடினர். &nbsp;தஞ்சை மாவட்டம் பூதலூர் பகுதியில், கடந்த 1970 ஆம் ஆண்டு தை முதல் நாளில் பட்டியல் இன மக்கள் பொங்கல் வைக்க அப்போதைய சாதி ஆதிக்க சக்திகள் அனுமதிக்கவில்லை. பொங்கல் தினத்தன்று ஆதிக்க சாதியினரின் வீடுகளில் பறையடிக்கவும், தொண்டூழியம் செய்யவும், அவர்கள் தரும் உணவை மட்டுமே வாங்கிச் செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் இருந்தன. &nbsp;எனவே, பட்டியல் இன மக்கள் வேறொரு நாளில் தங்கள் வீடுகளில் பொங்கல் வைப்பது வழக்கமாக இருந்தது. &nbsp;இந்தச் செயலைக் கண்டு கொதித்து எழுந்த தஞ்சை தியாகி என்.வெங்கடாசலம், தனது சொந்த ஊரான பூதலூர் தாலுகா, ராயமுண்டான்பட்டியில் தை முதல் நாளில் பட்டியல் இன மக்கள் பொங்கல் வைக்க வேண்டும். &ldquo;எவருக்கும் எவரும் அடிமை கிடையாது. தொண்டூழியம் செய்ய வேண்டியதில்லை. &nbsp;தை முதல் நாளிலேயே அனைவரும் பொங்கல் வைக்க வேண்டும்&rsquo;&rsquo; என வலியுறுத்தியதோடு, கடும் எதிர்ப்புக்கிடையே, பட்டியலின மக்களை ஒன்று திரட்டி, ஊர் பொது மந்தையில் தைத்திங்கள் முதல் நாளில் பொங்கல் வைத்தார். &nbsp;அது முதல் பட்டியல் இன மக்கள் தைத் திங்கள் முதல் நாளில் பொங்கல் வைக்கும் உரிமையை பெற்றனர். &nbsp;அதேபோல் தியாகி என்.வெங்கடாசலம் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தபோது, பட்டியலின மக்களுக்கு நிலத்தை ஒதுக்கி அவர்கள் சமூக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் எவருக்கும் அடிமை இல்லை என்ற நிலையை உருவாக்கினார். &nbsp;அதனால், பூதலூர் தெற்கு ஒன்றியம் ராயமுண்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் இன மக்கள் ஒவ்வொரு ஆண்டும் தைத்திங்கள் முதல் நாளில் அதே ஊரில் உள்ள தியாகி என்.வி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி அதன் பிறகு பொங்கல் வைப்பது வழக்கமாக உள்ளது. &nbsp;அதேபோல் இந்த ஆண்டு பூதலூர் சிபிஎம் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் வியாழக்கிழமை, தியாகி என்.வி நினைவிடத்தில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி அதன் பின்னரே தங்கள் வீடுகளில் பொங்கல் வைத்தனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.