தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிதம்பரத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரூ 28.9 கோடியில் இணைப்பு சாலை

13 Mar 2026, 4:52 pm
சிதம்பரத்தில் போக்குவரத்து நெரிசலை  தவிர்க்க ரூ 28.9 கோடியில் இணைப்பு சாலை
<p><strong>சிதம்பரத்தில் போக்குவரத்து நெரிசலை &nbsp;தவிர்க்க ரூ 28.9 கோடியில் இணைப்பு சாலை</strong></p> <p>சிதம்பரம், மார்ச் 13- சிதம்பரம் நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரூ 28.90 கோடி மதிப்பில் இணைப்பு சாலை அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார் சிதம்பரம் &nbsp;சடகோபன் நகரில் தில்லை அம்மன் ஓடை கரையில் ரூ 28 கோடியே 90 லட்சம் மதிப்பில் இணைப்பு சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. &nbsp;இதில் கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கலந்து கொண்டு பணியை துவக்கி வைத்தார். அதேபோல் சிதம்பரம் வண்டிகேட் பகுதி யில் உள்ள சிவகாமசுந்தரி அம்மன் ஓடையில் விவ சாய பணிகள் சிறப்பாக நடை பெற ரூ 21 லட்சம் செலவில் &nbsp;தூர்வாரும் பணியையும் தொடங்கி வைத்தார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் இந்த சாலை 2. 400 கி.மீட்டர் நீளத்திற்கு அமைக்கபடவுள்ளது. இதில் &nbsp;9 குழாய் பாலங்கள், 10 பெட்டி வடிவ பாலங்கள், 2 சிறு பாலங்கள் தேவையான இடங்களில் தடுப்பு சுவர் மற்றும் வடிகால்களுடன் இந்த சாலை அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் சிதம்பரம் நகரத்திற்குள் செல்லாமல் விரைவில் பேருந்து நிலையம், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல முடியும். நகரத்தில் போக்கு வரத்து நெரிசல் பெரிதும் குறைந்துவிடும் என்றார். &nbsp;இதில் கடலூர் மாவட்ட ஆட்சியர் சி.பி.ஆதித்யா செந்தில்குமார், சிதம்பரம் சார் ஆட்சியர் கிஷன் குமார், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சிவக் குமார், நீர்வளத்துறை செயற்பொறியாளர் காந்த &nbsp;ரூபன்,உதவி செயற்பொறி யாளர் ரமேஷ், சிதம்பரம் நகராட்சி ஆணையர் மல்லிகா, உதவி கோட்டப் பொறியாளர் பரமேஸ்வரி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். சாலை அமைப்பதற்கு ஏதுவாக ஓடையில் ரூ 40 கோடியில் தடுப்பு சுவர் பொதுப்பணித்துறை சார்பில் அமைக்கப் பட்டுள்ளது என்பது குறிப் பிடத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.