நவம்பர் 1 – மொழிவழி மாநிலங்கள் உருவான நாள் மொழிவழி மாநிலங்களும் இந்துத்துவா சவால்களும்! - அ.அன்வர் உசேன்
31 Oct 2026, 9:17 pm

நவம்பர் 1 – மொழிவழி மாநிலங்கள் உருவான நாள் மொழிவழி மாநிலங்களும் இந்துத்துவா சவால்களும்! - அ.அன்வர் உசேன்

1 மொழிவழி மாநிலம் என்றால் என்ன?

ஒரு பகுதியில் பெரும்பான்மை மக்கள் பேசும் மொழியின் அடிப்படையில் மாநிலத்தை அமைத்து, அந்த மொழியையே நிர்வாக, அலுவல் மொழியாக நிலைநிறுத்துவது மொழிவழி மாநிலம். தமிழின் அடிப்படையில் தமிழ்நாடு, மலையாளத்தின்அடிப்படையில் கேரளம் என்பவை எடுத்துக்காட்டுகள். விடுதலைக்குப் பின் 1953 அக்டோபர் 1இல் ஆந்திரமும், 1956 நவம்பர் 1இல் சென்னை, கேரளம், மைசூர் மாநிலங்களும் உருவாயின.

2 இந்தக் கோரிக்கை ஏன் அவசியமானது?

தாய்மொழியில் நிர்வாகம் நடந்தால்தான் மக்கள் அதைப் புரிந்துகொள்ளவும் அதில் பங்கேற்கவும் முடியும். மொழி, மக்களின் பண்பாட்டோடு பின்னிப்பிணைந்தது. எனவே மொழிவழி மாநிலம் ஒரு முக்கிய ஜனநாயகக் கோரிக்கை.

3 ஆதரித்தவர்கள் யார், எதிர்த்தவர்கள் யார்?

இந்தியா பல தேசிய இனங்களின் ஒன்றியம்; தேசிய இனத்தின் அடிப்படை மொழி என்பது தொடக்கம் முதலே கம்யூனிஸ்ட் கட்சியின் நிலை. எனவே விடுதலைக்கு முன்பும் பின்பும் அது மொழிவழி மாநிலங்களுக்காகக் குரல் கொடுத்தது. விடுதலைக்குமுன் இதை ஆதரித்த காங்கிரஸ், பின்னர் நேரு அரசில் ஆதரிக்கவில்லை. ஆர்எஸ்எஸ் தொடக்கம் முதலே கடுமையாகஎதிர்த்தது; சங் பரிவாரம் இன்றும் மொழி உரிமையை ஏற்பதில்லை.

4 அதற்கு முன் இந்தியாவின் அரசியல் கட்டமைப்பு எப்படி இருந்தது?

இந்தியா எனும் நிலப்பரப்பு பல்லாயிரம் ஆண்டுகளாக ஒரே அரசியல் அமைப்பாக இருந்ததில்லை. இன்றைய இந்தியாவின் பல பகுதிகளைத் தம் ஆட்சிக்குள் கொண்டுவந்த ஆங்கிலேயர், காலனியச் சுரண்டலை அதிகப்படுத்தும் நோக்கில் நிர்வாக அமைப்புகளை உருவாக்கினர். பிரிவினைக்குப் பின், சென்னை, பம்பாய், மேற்கு வங்கம், ஐக்கிய மாகாணம், மத்திய மாகாணம்,கிழக்குப் பஞ்சாப்,பீகார், ஒரிசா, அசாம் ஆகிய மாகாணங்களும், ஹைதராபாத், மைசூர், திருவிதாங்கூர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானசமஸ்தானங்களும் இருந்தன. அன்றைய சென்னை மாகாணத்தில் இன்றைய தமிழ்நாடு (கன்னியாகுமரி நீங்கலாக), ஆந்திரம், கேரளம், கர்நாடகத்தின் சில பகுதிகளஅடங்கியிருந்தன.

5 நேரு அரசு ஏன் மொழிவழி மாநிலங்களை அமைக்கவில்லை?

1920 நாக்பூர் மாநாட்டிலேயே காங்கிரஸ் மொழிவழி மாநிலக் கோரிக்கையை முன்வைத்தது. 1928 மோதிலால் நேரு குழுவும், 1945 காங்கிரஸ் தேர்தல் அறிக்கையும் அதை வலியுறுத்தின. ஆனால் விடுதலைக்குப்பின்,தேசப் பிரிவினையைக் காரணம் காட்டி, மொழிவழி மாநிலங்கள் தேச ஒற்றுமையைப் பலவீனப்படுத்தும் என்று மறுத்தது.1948இல் எஸ்.கே. தர் குழுவும், நேரு–படேல்–பட்டாபி சீதாராமையா குழுவும் கோரிக்கையை நிராகரித்தன. சந்தை நலனுக்காக மையப்படுத்தப்பட்ட நிர்வாகத்தையே முதலாளித்துவஅரசு நாடும்; புதிதாகச் சுரண்டல் சுதந்திரம் பெற்ற இந்திய முதலாளித்துவமும் அந்த வழியையே தேர்ந்தெடுத்தது. மக்கள்அதை ஏற்கவில்லை.

6 விடுதலைக்குப் பின் நடந்த முதல் போராட்டம் எது?

விடுதலைக்கு முன்பே, 1936இல் ஒடிசா மொழியின் அடிப்படையில் உருவான முதல் மாகாணமானது. விடுதலைக்குப் பின்,தெலுங்கு பேசும் மக்களுக்குத் தனி மாநிலம் கோரி காந்தியவாதி பொட்டி ஸ்ரீராமுலு 58 நாள் உண்ணாவிரதம் இருந்து1952இல் உயிர் நீத்தார். அது பெரும் போராட்டமாக வெடித்தது; துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் கொல்லப்பட்டனர். நேரு அரசுபின்வாங்கியது. 1953இல் ஆந்திரம் உருவானது; 1956இல் ஹைதராபாத் பகுதி அதனுடன் இணைக்கப்பட்டது.

7 இதில் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலை என்ன?

தெலுங்கு பேசும் பகுதிகள் அனைத்தையும் இணைக்கும் ‘விசாலாந்திரா’ கோரிக்கையைக் கம்யூனிஸ்ட் கட்சி முழுமையாக ஆதரித்துப் போராடியது; ஆந்திரக் காங்கிரஸார் போராட்டத்தைவிமர்சித்தனர். சென்னையும் திருப்பதியும் தமக்கே என்று தமிழ்நாடு, ஆந்திரக் காங்கிரஸார் மோதிக்கொண்டபோது, இருமாநிலங்களிலும் ஒரே நிலை எடுத்தது கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே: திருப்பதி ஆந்திரத்துக்கு என்று தமிழ்நாடு கமிட்டியும்,சென்னை தமிழ்நாட்டுக்கு என்று ஆந்திரக் கமிட்டியும் தீர்மானம் இயற்றின.

8 ஆந்திரத்துக்குப் பின் என்ன நடந்தது?

எழுந்த கோரிக்கைகளைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிஃபசல் அலி தலைமையில் மாநில மறுசீரமைப்பு ஆணையம் அமைக்கப்பட்டது. எல்லைப் பகுதிகளில் கிராமத்தை அலகாகக் கொண்டு, பெரும்பான்மைமொழியின்படி இணைக்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சிவிரிவான மனு அளித்தது. அதன் அடிப்படையில் கேரளம், மைசூர், சென்னை மாநிலங்கள் உருவாயின. பின்னர் பம்பாய் மாகாணம் மகாராஷ்டிரம், குஜராத் எனப்பிரிந்தது; பஞ்சாப், ஹரியானா உருவாயின. அனைத்திலும் கம்யூனிஸ்டுகள் முன்னணியில் நின்றனர்.

9 கன்னியாகுமரி தமிழ்நாட்டுடன் இணைந்தது எப்படி?

இன்றைய கன்னியாகுமரி திருவிதாங்கூர்–கொச்சி சமஸ்தானத்தில் இருந்தது. தமிழ் பேசும் பகுதிகளைச் சென்னை மாநிலத்துடன் இணைக்கக் கோரி மார்ஷல் நேசமணி தலைமையில் போராட்டம் நடந்தது. 1954 துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் மாண்டனர். ஜீவா, ஜி.எஸ். மணி உள்ளிட்ட கம்யூனிஸ்ட் தலைவர்கள் தீவிரமாகப் பங்கேற்றனர். ஆணையத்தின் பரிந்துரைப்படி தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு வட்டங்கள் தமிழ்நாட்டுடன் இணைந்து கன்னியாகுமரி மாவட்டமாயின; செங்கோட்டை நெல்லையுடன் இணைந்தது.

10 தமிழ்நாடு உருவாவதைத் தடுக்க முயற்சிகள் நடந்தனவா?

ஆம். சென்னை, கேரளம், ஆந்திரம் ஆகியவற்றை இணைத்து ‘தட்சிணப் பிரதேசம்’ அமைக்க வேண்டும் என்று ராஜாஜியும் சில காங்கிரஸ் தலைவர்களும் கோரினர். தமிழ்மாநிலம் உருவாவதைத் தடுக்கும் திசைதிருப்பல் என்று கம்யூனிஸ்ட் கட்சி அதை நிராகரித்தது; மூன்று பகுதி மக்களும் நிராகரித்தனர்.

11‘தமிழ்நாடு’ என்ற பெயர் எப்படி வந்தது?

சென்னை மாநிலத்தின் பெயரைத் ‘தமிழ்நாடு’ என மாற்றக் கோரி சங்கரலிங்கனார் 1956 ஜூலை 27இல் உண்ணாவிரதம் தொடங்கினார். அவர் அனுப்பிய மனுவுக்கு முதலமைச்சர் காமராசர் அரசு பதிலளிக்கவில்லை. உடல்நிலை மோச

மானபோது, எதிர்க்கட்சித் தலைவர் பி. ராமமூர்த்தியும் பின்னர் அண்ணாவும் வேண்டியும் அவர் உண்ணாவிரதத்தைக் கைவிடவில்லை. பந்தலைத் தாக்க முயன்ற காங்கிரஸ் குண்டர்களிடமிருந்து அவரைக் காத்தவர்கள் கம்யூனிஸ்டுகள். “நான் இறந்தால் என் உடலைக் கம்யூனிஸ்டுகளிடம் ஒப்படையுங்கள்; இறுதிச் சடங்கை அவர்கள் செய்யட்டும்” என்று மரண வாக்குமூலம் எழுதினார். அக்டோபர் 10 அன்று மயங்கிய நிலையில் மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர், மூன்றாம் நாள் உயிர் நீத்தார். அவரது உடலைக் கே.டி.கே. தங்கமணியும் கே.பி. ஜானகி அம்மாளும் பெற்றுக்கொண்டனர்.

அந்தத் தியாகமும் காங்கிரஸ் அரசை அசைக்கவில்லை. 1963இல் பி. ராமமூர்த்தியின் முன்முயற்சியில் பூபேஷ் குப்தா மாநிலங்களவையில் கொண்டுவந்த தீர்மானத்தை அண்ணா வழிமொழிந்தும் அது தோற்கடிக்கப்பட்டது. அண்ணா முதல்வரானபின், அனைத்துக் கட்சி ஆதரவுடன் 1969 ஜனவரியில் ‘தமிழ்நாடு’ பெயர்நடைமுறைக்கு வந்தது.

12 ஆர்எஸ்எஸ் ஏன் மொழிவழி மாநிலங்களை எதிர்க்கிறது?

‘ஒரே தேசம், ஒரே மொழி’ என்ற முழக்கத்துக்கும், இந்தியாவை ஒற்றைத் தன்மையுள்ள இந்து நாடாக்கும் திட்டத்துக்கும் மொழிவழி மாநிலங்கள் தடைக்கல் என்பதை சங் பரிவாரம் உணர்ந்திருந்தது. சமஸ்கிருதமே இந்தியாவின் ஒரே மொழியாக வேண்டும், அதுவரை சமஸ்கிருதமயமான இந்தி தேசிய மொழியாக இருக்க வேண்டும் என்பது கோல்வால்கரின் கூற்று. இன்றும் அதுவே அவர்களின் நிலை.25,000க்கும் குறைவானோர் பேசும் சமஸ்கிருதத்துக்குப் பல ஆயிரம் கோடி ஒதுக்கும் மோடி அரசு, கோடிக்கணக்கானோர் பேசும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடத்துக்குச் சொற்பத் தொகையையே தருகிறது.

13 மொழி உரிமைப் போராட்டம் இந்துத்துவா எதிர்ப்பின் பகுதியா?

ஆம். இந்தியாவின் பன்முகத்தன்மை மதம் சார்ந்தது மட்டுமல்ல, மொழி சார்ந்ததும்கூட. இந்தி, சமஸ்கிருதத் திணிப்பின்மூலம் அதன் மீது சங் பரிவாரம் தாக்குதல் தொடுக்கிறது. போஜ்புரி, மைதிலி, சந்தாலி, முண்டாரி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மொழிகள் இந்தியின் பகுதிகளாக வரையறுக்கப்பட்டு மறைக்கப்பட்டன. இந்தியராக இருக்க இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்று வட மாநில மக்களில் கணிசமானோர் கருதுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்துத்துவக் கருத்தியலைப் பொதுச்சிந்தனையாக்கும் முயற்சியில் மொழித் திணிப்புமுக்கியப் பங்கு வகிக்கிறது. மொழிவழி மாநிலங்கள் உருவான நாளை கொண்டாடும் இவ்வேளையில், சமஸ்கிருத-இந்தித் திணிப்பை எதிர்ப்பதே நம் முன் உள்ள பெரும் சவால்.ஆதாரம்: தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் (என். ராமகிருஷ்ணன்), ஜனசக்தி, இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் 4வது மாநாட்டுத் தீர்மானம், பீப்பிள்ஸ் டெமாக்ரசி, இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்து தமிழ், தினத்தந்தி,தீக்கதிர்.