காப்பீட்டுத் துறையில் 100 சதவிகித அந்நிய முதலீடு மசோதா ரத்து செய்ய லிக்காய் கோட்ட மாநாட்டில் வலியுறுத்தல்
23 Dec 2025, 4:05 pm
<p><strong>காப்பீட்டுத் துறையில் 100 சதவிகித அந்நிய முதலீடு மசோதா ரத்து செய்ய லிக்காய் கோட்ட மாநாட்டில் வலியுறுத்தல் </strong></p>
<p>திருநெல்வேலி, டிச.23- நெல்லையில் அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் ( லிக்காய் ) 5வது திருநெல்வேலி கோட்ட மாநாடு பாளையங்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமையன்று நடை பெற்றது. மாநாட்டிற்கு லிக்காய் சங்க கோட்டத் தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார் ,மூத்த முகவர் சரோஜா சங்க கொடியை ஏற்றி வைத்தார்/ கோட்ட செயல் தலைவர் கென்னடி வரவேற்று பேசினார், நிர்வாகிகள் கோவில்பட்டி ஆர்.முருகன், பாலசுப்ரமணியன் ,ஜி.கே.குமார், அமிர்தராஜ் ,ஸ்ரீகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்/ கணபதி அஞ்சலி தீர்மா னம் வாசித்தார், கோட்ட பொதுச் செயலாளர் எஸ்.குழந்தை வேலு வேலை அறிக்கை சமர்ப்பித்து பேசினார்/ கோட்ட பொரு ளாளர் கனகராஜ் வரவு செலவு அறிக்கைகளை சமர்ப்பித்து பேசினார், மாநாட்டில் சி ஐ டி யு ஆர். எஸ்.சென்பகம், உதய சூரியன், காப்பீட்டு கழக ஊழியர் சங்க கோட்ட பொதுச்செய லாளர் பொன்னையா, மதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் கே எம் ஏ நிஜாம், லிக்காய் மாநில பொருளாளர் தாமோதரன் மாநில செயல் தலைவர் அன்பு நடராஜன், மாநிலத் தலைவர் பூவலிங்கம், வரவேற்பு குழு தலைவர் எடிசன் ஆகியோர் பேசினர். சங்கத்தின் கௌரவத் தலைவராக கே.நடராஜன், கோட்ட தலைவராக எஸ் எம் ஏ கென்னடி, செயல் தலைவராக கோவில்பட்டி ஆர்.முருகன், கோட்ட பொதுச் செயலாளராக எஸ். குழந்தைவேலு,கோட்ட பொருளாளராக எம்.கனக ராஜ் மற்றும் 4 துணைத் தலைவர்கள்,4 துணைச் செயலா ளர்கள் என மொத்தம் 50 பேர் கொண்ட கமிட்டி தேர்ந்தெடுக் கப்பட்டது. மாநாட்டில் இன்சூரன்ஸ் துறையில் 100 சதவிகித அந்நிய முதலீடு செய்ய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாவை ரத்து செய்ய வேண்டும், எல்ஐசி பங்குகளை மேலும் விற்பனை செய்யும் முடிவை நிறுத்திட வேண்டும், எல்ஐசி முகவர்களுக்கு எல்ஐசி நிர்வாகம் பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்ட குரூப் இன்சூரன்ஸ் வயது வரம்பை 85 ஆக உயர்த்திட வேண்டும், அனைத்து முகவர்களுக்கும் 2 லட்ச ரூபாய் மருத்துவ காப்பீட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.</p>
