தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தேர்தல் ஆணையர்களுக்குவாழ்நாள் பாதுகாப்பு தவறு!

18 Oct 2026, 9:47 pm
தேர்தல் ஆணையர்களுக்குவாழ்நாள் பாதுகாப்பு தவறு!

தேர்தல் ஆணையர்களுக்குவாழ்நாள் பாதுகாப்பு தவறு!

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிநாதமாக விளங்குவது “சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்றகோட்பாடாகும் (பிரிவு 14). எந்தவொரு தன்னாட்சி அமைப்போ அல்லது தனிநபரோ சட்டத்திற்கு மேலானவர்கள்அல்ல என்பதே நமது ஜனநாயகத்தின் அடிப்படைத் தூண். ஆனால்,ஒன்றிய பாஜக அரசு 2023-ஆம் ஆண்டு கொண்டுவந்த தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் சட்டத்தின் பிரிவு 16, இந்த அடிப்படைக் கோட்பாட்டையே சிதைக்கும் வகையில்அமைந்துள்ளது. தேர்தல் ஆணையாளர்கள் பதவிக் காலத்தில் செய்யும் செயல்களுக்காக, அவர்கள் ஓய்வுபெற்ற பிறகும் வாழ்நாள்முழுமைக்கும் எந்தவொரு சிவில் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்தும் விலக்களிக்கும் (lifelong immunity)இந்தச் சட்டப்பிரிவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் உச்சநீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ்அனுப்பியுள்ளது.

ஜனநாயகத்தில் தேர்தல் ஆணையம் என்பது சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும், நடுநிலையாகவும் இயங்க வேண்டுமே தவிர, ஆட்சியாளர்களின் முறைகேடுகளுக்குத் துணைபோகும் அதிகாரிகளுக்குப் பாது

காப்புக் கவசமாக மாறக்கூடாது. இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 361-ன் கீழ் ஜனாதிபதி மற்றும் மாநில ஆளுநர்களுக்குக் கூட அவர்கள் பதவியில் இருக்கும்வரை மட்டுமே சில சட்டப் பாதுகாப்புகள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டின் தலைவர்களுக்கே இல்லாத அளவிலான வரம்பற்ற, வாழ்நாள் முழுமைக்குமான சட்டப்பாதுகாப்பைத் தேர்தல் ஆணையர்களுக்கு வழங்குவது சட்டத்தின் ஆட்சி எனும் கோட்பாட்டிற்கு முற்றிலும்எதிரானது.

நாடாளுமன்றத்தில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட மூல மசோதாவில் இந்த விசித்திரமான ‘வாழ்நாள் பாதுகாப்புப் பிரிவு’ இடம்பெறவே இல்லை. மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்ட அன்றைய தினத்தில், எவ்வித ஜனநாயக விவாதமும் இன்றி தன்னிச்சையாக இந்தத் திருத்தம் சேர்க்கப்பட்டு அவசரகதியில் நிறை

வேற்றப்பட்டது. தேர்தல் ஆணையத்தை ஆளும்கட்சியின் விருப்பப்படி இயங்கும் அமைப்பாக மாற்றிவிட்டு, அதில் இடம்பெறும் அதிகாரி களுக்குப் பாதுகாப்புக்கவசம் அளிப்பதன் மூலம், எதிர்காலத்தில் அவர்கள் செய்யும் வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் மற்றும்ஜனநாயக விரோத நடவடிக்கைகளை நீதிமன்றக் கூண்டில் நிறுத்த முடியாதபடி மோடி அரசு வழிவகை செய்துள்ளது.

அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சமத்துவ உரிமையைப் பறிக்கும் இந்த மக்கள் விரோத சட்டப்பிரிவு 16 உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும். தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமையையும் ஜனநாயகப் பண்புகளையும் பாதுகாக்கவும், மோடி அரசின் இத்தகைய பாசிச மற்றும் எதேச்சதிகாரச் சட்டத் திருத்தங்களை முறியடிக்கவும் அனைத்து முற்போக்குச் சக்திகளும்ஒன்றுபட்டு மேலும் வலுவாகக் குரல் கொடுக்க வேண்டும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.