மனைவியைக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை
8 Apr 2026, 5:30 am

மனைவியைக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை

கடலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு. கடலூர், ஏப். 7- கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம் ஆனந்த் (44). ஓட்டுநராகப் பணியாற்றி வந்த இவர், தனலட்சுமி என்பவரைக் காதலித்து கடந்த 20.05.2010 அன்று திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு, இவர்களுக்கு இடையே வரதட்சணை தொடர்பாகத் தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்பட்டு வந்தன. இந்தப் போராட்டத்தின் உச்சகட்டமாக, பிரேம் ஆனந்த் தனது மனைவி தனலட்சுமியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார்.

இது குறித்து கடலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, பிரேம் ஆனந்தைக் கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை நீதிபதி ஜயந்தி தீர்ப்பளித்தார். அதில், தன் மனைவியைக் கொலை செய்த குற்றத்திற்காகப் பிரேம் ஆனந்திற்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.