முந்தய பக்கம்

மாட்டிறைச்சி வைத்திருந்தவர்களுக்கு குஜராத்தில் ஆயுள் தண்டனை

13 Nov 2025, 3:30 pm
மாட்டிறைச்சி வைத்திருந்தவர்களுக்கு குஜராத்தில் ஆயுள் தண்டனை
<p><strong>மாட்டிறைச்சி வைத்திருந்தவர்களுக்கு குஜராத்தில் ஆயுள் தண்டனை</strong></p> <p>அகமதாபாத் குஜராத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு அம்ரேலி நகரைச் சேர்ந்த காசிம் சோலங்கி (20), சத்தார் இஸ்மாயில் (52) மற்றும் அக்ரம் ஹாஜி (30) ஆகிய 3 பேர் தங்களது &nbsp;வீடுகளில் 40 கிலோ மாட்டிறைச்சி வைத்திருந்ததாக காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். &nbsp;இதுதொடர்பான வழக்கு குஜராத்தின் கீழமை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வியாழனன்று தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பில்,&rdquo;மாட்டிறைச்சி வைத்திருந்த குற்றத்திற்காக 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும் 3 பேருக்கும் தலா ரூ.6 லட்சம் என மொத்தம் ரூ. 18 லட்சம் அபராதம் இந்த நீதிமன்றம் விதிக்கிறது&rdquo; என நீதிபதி உத்தரவிட்டார். &nbsp;குஜராத்தில் மட்டுமின்றி நாட்டிலேயே மாட்டிறைச்சி வைத்திருந்ததாக 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்திருப்பது இதுவே முதல்முறை ஆகும் என்ற நிலையில், நீதித்துறையும் பாஜக வசம் சென்றுவிட்டது போன்ற சந்தேகம் கிளம்பியுள்ளது என அரசியல் விமர்சகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram