தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தலித் நபர் புகார் அளித்ததற்காகவே கொலை தவெக வேட்பாளர் உறவினர் உள்ளிட்ட 5 பேருக்கு ஆயுள் தண்டனை

10 Apr 2026, 5:30 am
தலித் நபர் புகார் அளித்ததற்காகவே கொலை தவெக வேட்பாளர் உறவினர் உள்ளிட்ட 5 பேருக்கு ஆயுள் தண்டனை

தலித் நபர் புகார் அளித்ததற்காகவே கொலை தவெக வேட்பாளர் உறவினர் உள்ளிட்ட 5 பேருக்கு ஆயுள் தண்டனை

மதுரை, ஏப்.9- மதுரை மாவட்டத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் ஊராட்சி நிர்வாகத்தின் மீது புகார் அளித்த தற்காவே கொலை செய்யப்பட்ட வழக்கில், தற்போ தைய தேர்தல் சூழலில் முக்கிய திருப்பமாக, தவெக வடக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கல்யாணவ மின் மாமா உள்ளிட்ட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீண்டாமை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மதுரை கருப்பாயூரணி அருகே உள்ள ஓடைப்பட்டி யைச் சேர்ந்த சின்ன கருப்பையா (பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்), கடந்த 2015ஆம் ஆண்டு மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். அதில், அப்பகுதி முன்னாள் ஊராட்சித் தலைவரின் கணவர் சம்பத்குமார் புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து வைத்துள்ளதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்த புகாரால் ஆத்திரமடைந்த சம்பத்குமார் மற்றும் அவரது தரப்பினர், சின்ன கருப்பையாவை பழிவாங்க திட்டமிட்டனர். இதன் தொடர்ச்சியாக 2016ஆம் ஆண்டு சம்பத்குமார் உள்ளிட்டோர் சேர்ந்து ஆயுதங்களால் தாக்கி சின்ன கருப்பையாவை கொலை செய்தனர்.

பாதிக்கப்பட்டவர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், இந்த வழக்கு மதுரை மாவட்ட தீண்டாமை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, புதனன்று தீர்ப்பளித்தார். அதில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.5,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.