தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

முதுகில் தழும்புகள், நெஞ்சில் செங்கொடி - என்.சீனிவாசன்

10 Oct 2026, 10:05 pm
முதுகில் தழும்புகள்,  நெஞ்சில் செங்கொடி -  என்.சீனிவாசன்

முதுகில் தழும்புகள், நெஞ்சில் செங்கொடி - என்.சீனிவாசன்

திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் உள்ள பின்னவாசல் நான் பிறந்த ஊர். அங்கிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில்தான் தோழர் பி.எஸ்.டி. வாழ்ந்த பாங்கல். அங்குதான் அவர் வளர்ந்தார், வாழ்ந்தார். அதனால் பள்ளிப் பருவத்திலிருந்தே அவரை ஒரு மாபெரும் தலைவராகப் பார்த்து வளர்ந்தவன் நான்.

ஒரு சிறுவன் கண்ட காட்சிஎங்கள் ஊருக்கு அவர் அடிக்கடி வருவார்; அங்கிருந்த கம்யூனிஸ்ட் தோழர்களுடன் கலந்து பேசிவிட்டுச் செல்வார். தோழர்கள் அவரைச் சுற்றி அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்பதும், அவர் கிளம்பும்போது அனைவரும் எழுந்து நின்று வழியனுப்புவதும் எனக்குக் கண்கொள்ளாக் காட்சி. தோழர்கள் அவருக்குக் காட்டிய மரியாதையும் பணிவும் என்னை வியப்பில் ஆழ்த்தின. பின்னாளில் நானும் அந்த வரிசையில் அமர்ந்தேன்.

என் தந்தை பின்னவாசல் கிராமக் கணக்குப்பிள்ளை என்பதால், கட்சிப் பிரச்சினைகள் தொடர்பாக அவரைப் பார்க்கப் பி.எஸ்.டி. பலமுறை எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறார். எப்போது பேசினாலும் விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பது பற்றியே பேசுவார். அப்போதெல்லாம் அவை எனக்கு அதிசயமாக இருக்கும். ஒன்றும் புரியாத வயதிலும், அவர் பேசியவற்றை ஆச்சரியத்தோடு கவனித்ததன் மூலம் நான் நிறையக் கற்றுக்கொண்டேன்.

பள்ளி செல்லாத சிறந்த நிர்வாகி

நான் படித்த காலத்திலேயே அவர் பாங்கல் ஊராட்சி மன்றத் தலைவராக ஆறு முறை போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்; மூன்று முறை தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய பெருந் தலைவராகப் பணியாற்றினார். பள்ளிக்கூடமே செல்லாத அவர், தமிழகத்திலேயே மிகச் சிறந்த ஒன்றியத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு, முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பரிசைப் பெற்றார். ஊராட்சித் தலைவர் பதவியைப் போட்டியின்றி ஆறு முறை ஒருவர் பெறுவது எப்படி என்பது அந்த வயதில் எனக்குப் பெரும் ஆச்சரியம்; மக்கள் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையே அதற்கான விடை என்பது பின்னர்தான் புரிந்தது. திருவாரூர் சட்டமன்ற உறுப்பினராக ஒரு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், தொகுதி முழுவதும் எளிய மக்களுக்கு ஆற்றிய பணி மகத்தானது.

இத்தனை பதவிகள் வகித்தாலும், அவரது பயணம் நடந்தோ, யாராவது அழைத்துச் செல்லும் சைக்கிளிலோ, பேருந்திலோதான். அந்த எளிமை நாம் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டியது.

அரங்கை அழவைத்த தழும்புகள்

உழைக்கும் மக்களுக்கான போராட்டங்களில் அவர் பலமுறை சிறை சென்றார்; ஏறத்தாழப் பத்தாண்டுகள் சிறையிலும், தலைமறைவாகவும் வாழ்ந்தார். தஞ்சையில் நடைபெற்ற கட்சியின் மாநில மாநாட்டில், பிரதிநிதிகளிலேயே அதிக காலம் சிறைவாசம் அனுபவித்தவர் தோழர் பி.எஸ்.டி. என்று அறிவிக்கப்பட்டபோது எழுந்த கரவொலி மறக்க முடியாதது.

திருவாரூரில் நடைபெற்ற வாலிபர் சங்க மாநில மாநாட்டின் வெற்றிக்காக அரும்பணியாற்றியவர் அவர். அந்த மாநாட்டில் வாழ்த்துரை வழங்கியபோது தன் அனுபவங்களை உருக்கமாக எடுத்துரைத்தார். இறுதியில், சட்டையைக் கழற்றித் தன் முதுகைக் காட்டினார். காவல்துறையின் தாக்குதல்கள் பதித்திருந்த தழும்புகளைக் கண்டு அவையில் இருந்த அத்தனை பேரும் கண்ணீர் விட்டனர். மற்றவர்களுக்காக அவர் செய்த தியாகத்தின் அடையாளங்கள் அவை.

வழிகாட்டியாக1967 முதல் அவரோடு நெருக்கமாகப் பழகியிருக்கிறேன்; அந்தக் காலத்தை என்னால் மறக்கவே முடியாது. ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டச் செயற்குழுவிலும் மாவட்டக்குழுவிலும் பத்தாண்டுகள் அவரது வழிகாட்டலில் பணியாற்றி வளர்ந்தேன். கட்சியின் மீது அவருக்கு இருந்த பற்று ஈடு இணையற்றது. எப்போதும் கட்சியின் வளர்ச்சி பற்றியே சிந்திப்பார். இளைஞர்களைக் கண்டால் விட மாட்டார்; அவர்களோடு நீண்ட நேரம் உரையாடி, பொறுமையாக விளக்கி, கட்சியின்பால் ஈர்த்துவிடுவார். அப்படி ஈர்க்கப்பட்டவர்களில் பலர் பின்னாளில் இயக்கத்தின் பொறுப்பாளர்களாக உயர்ந்தனர்.

அவரது குடும்பத்தோடு எனக்கு மிகநெருங்கிய உறவும், தோழமையும் உண்டு. தனுஷ்கோடி - மனோன்மணி தம்பதியருக்கு புருஷோத்தமன், அசோகன் என்ற மகன்களும், விஜயலெட்சுமி, சுசிலா, சித்ரா ஆகிய மகள்களும், கிருஷ்ணவேணி, மாலதி என்ற மருமகள்களும், குணசேகரன், செல்வராஜ் என்ற மருமகன்களும், பேரன்களும், பேத்திகளும் உண்டு. இவர்கள் மிகுந்த பாசமும், நேசமும் கொண்டவர்கள். பத்திரிகையாளர்களின் தலைவராக செயல்பட்ட புருஷோத்தமன் சமீபத்தில் மறைந்தார்.

உயர்ந்த பதவிகளை வகித்தாலும் மக்களிடம் தோழர் பி.எஸ்.டி காட்டிய அன்பும் தன்னடக்கமும் எடுத்துக்காட்டானவை. வறுமையையும் சிரமங்களையும் இன்முகத்தோடு ஏற்றவர்; கட்சிக்காக எதைச் செய்தாலும் மகிழ்ந்தவர். அரை நூற்றாண்டுக்கும் மேலாக அப்படி ஒரு தன்னலமற்ற வாழ்க்கையை வாழ்ந்து காட்டிய தோழர் பி.எஸ்.டி.யின் எளிமையும் தன்னடக்கமும் என்றும் இளைய தலைமுறைக்கு வழிகாட்டும். மக்கள் மனங்களில் அவர் என்றும் மறையாமல் வாழ்வார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.