பாலியல் வன்கொடுமைகளை தடுத்திடுக எல்.ஐ.சி. உழைக்கும் மகளிர் மாநாடு வலியுறுத்தல்
yesterday

பாலியல் வன்கொடுமைகளை தடுத்திடுக எல்.ஐ.சி. உழைக்கும் மகளிர் மாநாடு வலியுறுத்தல்

சென்னை, ஜூன் 21- எல்.ஐ.சி. காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் கோட்டம் 2இன் உழைக்கும் மகளிர் 29ஆவது மாநாடு சென்னை வேப்பேரியில் சனிக்கிழமை (ஜூன் 20) நடைபெற்றது. இணைச் செயலாளர் வி.அனுஜா, இணை அமைப் பாளர் எஸ்.எஸ்.கீதா ஆகியோர் தலைமை தாங்கி னர். இணை அமைப்பாளர் கே.புவனேஸ்வரி வரவேற் றார். உழைக்கும் மகளின் அமைப்பாளர் கே.துளசி வேலை ஸ்தாபன அறிக் கையை சமர்ப்பித்தார்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொருளாளர் ராணி மாநாட் டைத் துவக்கி வைத்து பேசி னார். தென்மண்டல உழைக்கும் மகளிர் குழு வின் இணை அமைப்பாளர் ஆ.எஸ்.செண்பகம், எல்ஐசி முதல் நிலை அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் பி.வி.ரஷிதா, முகவர்கள் சங்கத்தின் அகில இந்திய மகளிர் துணைக் குழு உறுப்பினர் ஒய்.ரேணுகா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். காப் பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் பொதுச்செய லாளர் ஆர்.சர்வமங்களா மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.

“ஜீவிகா” அமைப்பு உருவாக்கப்பட்டு, அதன் அமைப்பாளராக கே.துளசி தேர்வு செய்யப் பட்டார். இணை அமைப்பா ளர் டி.லீலாவதி நன்றி கூறி னார். முன்னதாக எவரெஸ் டில் எல்ஐசி-யின் கொடியை பறக்க விட்டு சாதனை புரிந்த ஜெயலட்சுமி, எல்ஐசி தென்மண்டல அளவில் 500 பாலிசிகளை வழங்கி சாதனை புரிந்த முகவர் பாக்கியலட்சுமி ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப் பட்டது. மாநாட்டின் துவக் கத்தில் “மனுஷி” ஆவணப் படம் திரையிடப்பட்டது.

தீர்மானங்கள்

எல்ஐசி உள்ளிட்ட பொது த்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் நட வடிக்கைகளை கைவிட வேண்டும், எல்ஐசி-யில் 3 மற்றும் 4ஆம் பிரிவுகளுக் கான புதிய பணி நியமனங் களை உருவாக்க வேண்டும், சாதி ஆணவக் கொலைகளை தடுக்க, தனி ச்சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டன.

நிர்வாகிகள் தேர்வு

அமைப்பாளராக வி.அனுஜா, இணை அமைப் பாளர்களாக ஜூலியட் சி.ஞானபாக்கியம், கே.புவ னேஸ்வரி, டி.ஆர்.விஜய லட்சுமி, ஜி.எம்.லலிதா, ஆர்.சிந்துஜா, எஸ்.விஜய லட்சுமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.