தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளிம்புநிலை பெண்களின் முன்னேற்றத்திற்கு உழைக்கும் மகளிர் பாடுபட வேண்டும் எல்ஐசி உழைக்கும் மகளிர் மாநாட்டில் ஜி.சம்கிராஜ் அழைப்பு

1 hour before
விளிம்புநிலை பெண்களின் முன்னேற்றத்திற்கு உழைக்கும் மகளிர் பாடுபட வேண்டும் எல்ஐசி உழைக்கும் மகளிர் மாநாட்டில் ஜி.சம்கிராஜ் அழைப்பு
<p><strong>விளிம்புநிலை பெண்களின் முன்னேற்றத்திற்கு உழைக்கும் மகளிர் பாடுபட வேண்டும் எல்ஐசி உழைக்கும் மகளிர் மாநாட்டில் ஜி.சம்கிராஜ் அழைப்பு</strong></p><p>சென்னை, ஜூலை 12 - விளிம்பு நிலை பெண்களின் முன்னேற்றத் திற்காகவும் எல்ஐசி உழைக்கும் பெண்கள் பாடுபட வேண்டும் என்று அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் ஜி.சம்கிராஜ் அழைப்பு விடுத்தார். காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் சென்னை பகுதி-1, எல்ஐசி உழைக்கும் மகளிர் 29வது மாநாடு சனிக்கிழமையன்று (ஜூலை 11) ராயப்பேட்டையில் நடை பெற்றது. இந்த மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய வழக்கறிஞர் ஜி.சம்கிராஜ், காப்பீட்டுத் துறையில் 245 தனியார் நிறு வனங்களை தேசியமயமாக்க வைத்தது அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் வரலாற்றுச் சாதனை. தனியார்மயத்திற்கு எதிரான 75 ஆண்டு காலப் போராட்டம் உழைக்கும் மக்களின் பேராதரவைப் பெற்றுள்ளது. சட்டம் என்பது கால மாற்றத்தைப் பிரதி பலிக்கும் ஒரு கருவி. ஆனால், தற்போதைய ஆட்சியாளர்கள் அந்த சட்டங்களை பயன்படுத்தி மீண்டும் தனியார்மயத்தை நியாயப்படுத்துவது சமூக மாற்றத்திற்கு மாறான நடவடிக்கையாக உள்ளது. தொழி லாளர் சட்டங்கள் பல இருந்தாலும் அவை பெரும்பாலும் ஏட்டளவிலேயே உள்ளது. ஆளும் வர்க்கத்தின் அரசியல் விருப்பமே இக்கொள்கைகளைத் தீர்மானிக்கிறது. எனவே, இத்தகைய பிற்போக்குத் தனத்தை தடுக்க, தொழிற்சங்கங்கள் ஒட்டு மொத்த உழைக்கும் வர்க்கத்தின் சக்தி யாகத் திரள வேண்டும். தொழிற்சங்கங்க ளில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வந்தாலும், தலைமைப் பொறுப்புகளுக்கு அவர்கள் வருவதை தடுக்கும் ஆணா திக்கக் கட்டமைப்பு இன்னும் மாறவில்லை. வேலை நேரத்திற்குப் பிந்தைய குடும்பப் பொறுப்புகள் மற்றும் சமூகச் சுமை பெண்களைத் தொழிற்சங்க செயல்பாடு களில் முழுமையாக ஈடுபட விடாமல் தடுக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்முறை, பணியிடப் பாதுகாப்பின்மை சமூகத்தில் வேரூன்றி உள்ளது. சட்டங்கள் இருந்தாலும் நடைமுறையில் சமத்துவத்தை உறுதி செய்ய வேண்டியது சமூகத்தின் கடமையாகும். பெண்கள் பணியிலிருந்து வெளி யேறுவதற்கு பெரும்பாலும் வீட்டு வேலை மற்றும் குழந்தை பராமரிப்புகளே காரணமாக உள்ளன. ஆனால், இதைப் பெண்களின் இயல்பான கடமையாக சமூகம் பார்ப்பதை மாற்ற வேண்டும். தொழிற்சங்கங்களில் இயங்கும் பெண்கள், தாங்கள் ஒரு சலுகை பெற்ற பிரிவினர் என்பதை உணர்ந்து, விளிம்புநிலை மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் பணியாற்ற வேண்டும். சங்கத்தை வலுப்படுத்துவதன் மூலமே தனியார்மயத்தை வீழ்த்தவும், நீதியான சமூகத்தை உருவாக்கவும் உதவும். இவ்வாறு அவர் பேசினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.