தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

1 hour before
திருச்சி விரைவு செய்திகள்

சோசலிசம் வந்த பின் கம்ப்யூட்டரைக் கொண்டு வாருங்கள்

ஆட்டோமேஷன் எதிர்ப்புப் போராட்டத்தின் போது நிர்வாகத்துடனான பேச்சுவார்த்தையில், “சோவியத் யூனியனில் கம்ப்யூட்டர்கள் வந்து விட்டதே, நீங்கள் ஏன் எதிர்க்கிறீர்கள்?” என்று கிண்டலா கக் கேட்கப்பட்டது. அதற்குச் சங்கப் பொதுச் செயலாளர் சரோஜ் சவுத்ரி, “அங்கு சோசலிசம் இருக்கிறது, இங்கே யும் முதலில் சோசலிசத்தைக் கொண்டுவாருங்கள், கம்ப்யூட்டரைப் பின்னர் பார்க்கலாம்” என நொடியில் பதிலடி தந்தார். முதலாளித்துவத்தில் தொழில்நுட்ப உபரியை யார் அனுபவிப்பார்கள் என்ற ஆழமான அரசியலை விளக்கிய எளிமையான வகுப்பறையாக அது மாறியது.

அடக்குமுறையை எதிர்கொள்ள கொல்கத்தாவில் நடந்த ஒத்திகை

காவல்துறை எந்த நேரத்திலும் வன்முறையைப் பிரயோகித்துக் கைது செய்யக்கூடும் என்ற சூழலில், கொல்கத்தா ‘இலாகோ விஜில்’ போராட்டம் பல மாதங்கள் நீடித்தது. அப்போது அங்கு சென்ற தென் மண்டல முன்னாள் பொதுச் செயலாளர் தோழர் இராஜப்பா, ஒரு சிலிர்க்க வைக்கும் காட்சியைக் கண்டார். காவல்துறை அடக்குமுறையை எவ்வாறு எதிர்கொண்டு வன்முறையைத் தாங்கி நிற்பது என்ப தற்கான ஒத்திகைப் பயிற்சியைத் தோழர்களுக்குச் சுனில் மைத்ரா நேரடியாக வழங்கிக் கொண்டிருந்தார். அதனால்தான் அவர் சங்கத்தின் ‘இராணுவ அமைச்சர்’ என அழைக்கப்பட்டார்.

உலகமயமாக்கலின் மாரீச மானை முறியடித்த ஊழியர்களின் களம்

உலகமயப் பாதையில் ‘நுகர்வோர் நலன்’ என்ற மாரீச மான் ஏவப்பட்டபோது, என்.எம்.சுந்தரம் நுகர்வோர் பிரதிநிதிகளின் வங்கி விமர்சனங்களுக்குத் தகுந்த பதிலடி தந்தார். “தனியார்மய எதிர்ப்புப் போராட் டம் உங்கள் மேசைகளிலிருந்து துவங்க வேண்டும்” என்று கூறிப் பணிக்கலாச்சார விவாதங்களை உரு வாக்கினார். மக்கள் கருத்தைத் திரட்ட 1995, 1999 ஆண்டுகளில் நடத்தப்பட்ட மாபெரும் கையெழுத்து இயக்கங்கள் மூலம் முறையே 65 லட்சம் மற்றும் ஒன்றரைக் கோடி கையெழுத்துகள் பெறப்பட்டு, மக்களுக்கான கடப்பாட்டை ஊழியர்கள் மனதில் பதியச் செய்தது.

இயல்பான ஏகபோகத்தின் அர்த்தத்தை கிராமங்களில் தேடுங்கள்

1994 மல்ஹோத்ரா குழு அறிக்கைக்கு எதிராக, இன்சூரன்ஸ் துறை ஏன் அரசு வசமே இருக்க வேண்டும் என்பதை என்.எம்.சுந்தரம் மக்கள் மையமாக வாதாடினார். விவாதமொன்றில் எல்.ஐ.சி ‘இயல்பான ஏகபோகமாக’ (Natural Monopoly) இருக்க வேண்டும் என்றார். அதற்கு ஆர்.என்.மல்ஹோத்ரா, “பொருளாதாரப் புத்தகங்களில் இக்கருத்தைக் கேள்விப்பட்டதே இல்லை” என்ற போது, சுந்தரம் சற்றும் தாமதிக்காமல், “இதை நூலக அலமாரிகளில் தேடாதீர்கள், கிராமத்து நிலங்க ளுக்கும் குடிசைகளுக்கும் வாருங்கள், அங்குதான் இக்கருத்துக்கான உண்மையான அர்த்தம் புரியும்” என்றார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.