எல்ஐசி ஊழியர் சங்க முன்னாள் பொதுச்செயலாளர் எஸ்.ராமன் காலமானார்
15 May 2026, 11:11 pm

எல்ஐசி ஊழியர் சங்க முன்னாள் பொதுச்செயலாளர் எஸ்.ராமன் காலமானார்

வேலூர், மே 15 - காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க வேலூர் கோட்ட மேனாள் பொதுச்செயலாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கி ணைந்த வேலூர் மாவட்ட முன்னாள் செயற்குழு உறுப்பினருமான தோழர் எஸ்.ராமன் (61) வியாழக்கிழமை அதிகாலை காலமானார்.

அவருக்கு ராதா என்ற மனைவியும், ரகுநந்தன் என்ற மகனும் உள்ளனர். எல்ஐசி வேலூர் கோட்டத்தின் அடையாளமாகத் திகழ்ந்த இவர், சிறந்த மார்க்சியச் சிந்தனை யாளர், படைப்பாளி மற்றும் சமூக வலை தளங்களில் அரசியல் கட்டுரைகள் வாயிலாகத் தொடர்ந்து இயங்கியவர் ஆவார்.

சத்துவாச்சாரி நேதாஜி நகரில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.சுவாமிநாதன், மாவட்டச் செயலாளர் எஸ்.டி.சங்கரி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.காத்தவராயன், கே.ஜெ.சீனிவாசன், செ.ஏகலைவன், இடைக்கமிட்டி செயலாளர்கள் டி.முரளி, சுடரொளியன், சி.சரவணன், எஸ்.சிலம்பரசன், வி.குபேந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் வி.நாகேந்திரன், சி.எஸ்.மகாலிங்கம், எம்.கணேஷ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

மேலும், காப்பீட்டு கழக ஊழியர் சங்க அகில இந்திய இணைச் செயலாளர் எம்.கிரிஜா, தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் இணைச் செய லாளர் ஜானகிராமன், சென்னை கோட்டம் 2 தலைவர் மனோகரன், வேலூர் கோட்ட நிர்வாகிகள் பாலாஜி, பழனிராஜ், குணாளன், ரமேஷ்பாபு, வைத்தியலிங்கம், வேலாயுதம், மகளிர் துணைக்குழு நிர்வாகிகள் அமுதா, ஜெயஸ்ரீ மற்றும் ஓய்வூதியர் சங்க நிர்வாகி சின்னையா உள்ளிட்ட ஏராளமானோர் மலர்வளையம் வைத்து செவ்வஞ்சலி செலுத்தினர்.