தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆயுள் காப்பீட்டு கழக ஊழியர் சங்க முன்னாள் தலைவர் டி.மணவாளன் காலமானார் அரசியல் கட்சித் தலைவர்கள், காப்பீட்டு ஊழியர்கள் அஞ்சலி

21 May 2026, 1:30 am
ஆயுள் காப்பீட்டு கழக ஊழியர் சங்க  முன்னாள் தலைவர் டி.மணவாளன் காலமானார் அரசியல் கட்சித் தலைவர்கள், காப்பீட்டு ஊழியர்கள் அஞ்சலி

ஆயுள் காப்பீட்டு கழக ஊழியர் சங்க முன்னாள் தலைவர் டி.மணவாளன் காலமானார் அரசியல் கட்சித் தலைவர்கள், காப்பீட்டு ஊழியர்கள் அஞ்சலி

கடலூர், மே 20- ஆயுள் காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் டி.மண வாளன் (65) உடல் நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முன்னாள் கடலூர் மாவட்ட பொருளாள ராகவும், காப்பீட்டு கழக ஊழியர் சங்கம், காப்பீட்டு கழக ஓய்வூதியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் முக்கியப் பொறுப்புகளை வகித்தவருமான இவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி ஊழியராகத் திகழ்ந்தார்.

மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு வெகுஜன அமைப்புகளின் மாநில மாநாட்டு வரவு செலவுப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தவர்.

உடல்நலக் குறைவு காரண மாகப் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மரணமடைந்தார்.

அவரது உடல் பொதுமக்கள் அஞ்ச லிக்காகக் கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டி ருந்தது.

புதன்கிழமை மதியம் அவரது உடலுக்கு சிபிஎம் மாவட்ட செயலாளர் கோ.மாதவன் செங்கோடி போர்த்தி மரியாதை செலுத்தி னார்.

மேலும், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கண்ணன், சாமிநாதன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழ.வாஞ்சி நாதன், மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத், மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.ஆள வந்தார் மற்றும் இன்சூரன்ஸ் ஊழியர் சங்க நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து, தென் மண்டல இன்சூ ரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் உதவிப் பொருளாளர் ஆர்.கிரண்குமார், முன்னாள் இணைச் செயலாளர் எஸ். சிவசுப்ரமணியன், பென்ஷனர் கூட்டமைப்பின் சுகுமாரன், ஓய்வூதியர் சங்கத் தலைவர்கள் ஆர்.மனோகரன், டி.புருசோத்தமன், காசி நாதன், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பலரும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பால கிருஷ்ணன் தொலைபேசி வாயிலாகத் தனது இரங்கலைத் தெரிவித்தார்.

பின்னர் புதன்கிழமை மதியம் வண்டிப் பாளையத்தில் அவரது உடல் நல் அடக்கம் செய்யப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.