தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அனைவருக்குமான ஓய்வூதியத் திட்டம் எல்ஐசி பென்சனர் சங்க மாநாடு வலியுறுத்தல்

28 Feb 2026, 2:29 pm
அனைவருக்குமான ஓய்வூதியத் திட்டம் எல்ஐசி பென்சனர் சங்க மாநாடு வலியுறுத்தல்
<p><strong>அனைவருக்குமான ஓய்வூதியத் திட்டம் எல்ஐசி பென்சனர் சங்க மாநாடு வலியுறுத்தல்</strong></p> <p>கோவை, பிப். 28- அனைவருக்குமான ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என &nbsp; கோவையில் நடைபெற்ற எல்ஐசி பென் சனர் சங்க மாநாடு வலியுறுத்தியுள்ளது. கோவை, ராமநாதபுரம் எஸ்.என். அரங்கில் கோவைப்பகுதி எல்ஐசி பென் சனர் சங்கத்தின் 14-ஆவது மாநாடு பி. வி.கல்யாணசுந்தரம் தலைமையில் சனி யன்று, நடைபெற்றது. சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்து மாநாட்டைத் தொடங்கி வைத்த அகில இந்திய இன் சூரன்ஸ் பென்சனர் சங்க உதவித் தலை வர் இரா.புண்ணியமூர்த்தி உரையாற்றி னார். அப்போது அவர் பேசுகையில், &ldquo;நாட்டில் உள்ள பெரும் முதலாளிக ளுக்கு 2% கூடுதல் வரி விதித்தாலே, 60 &nbsp;வயது கடந்த 40 கோடி முதியோர்களுக் கும் மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்க &nbsp;முடியும். கேரளம், மொரிசியஸ் மற்றும் &nbsp;நேபாளம் போன்ற இடங்களில் இத் தகைய திட்டங்கள் நடைமுறையில் உள் ளன. இந்தியாவிலும் அனைவருக்கு மான ஓய்வூதியத் திட்டத்தை அமல்ப டுத்த ஒன்றிய அரசை வலியுறுத்தித் தொடர் போராட்டங்களை முன்னெ டுத்து வருகிறோம். மேலும், மருத்துவக் &nbsp;காப்பீட்டு திட்டத்தில் 60 வயது கடந்த அனைத்து ஓய்வூதியர்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட வேண்டும்&rdquo; என்றார். தொழிலாளர் விரோத நான்கு தொகுப்பு சட்டங்களை திரும்பப் பெற &nbsp;வேண்டும். பொதுத்துறை நிறுவனங் களை பாதுகாத்திட வேண்டும். ஒப் பந்த மற்றும் அவுட்சோர்சிங் முறையை &nbsp;ரத்து செய்து, பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு இணையான ஓய்வூதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும். மின்சார விநியோகத்தை தனியார்மயமாக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டது. இம்மாநாட்டில் கோவை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத் தலைவர் பி. குருசாமி, ஊழியர் சங்கச் &nbsp;செயலாளர் கே. துளசிதரன் ஆகியோர் &nbsp;வாழ்த்துரை வழங்கினர். தென்மண்டல &nbsp;இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் வி.சுரேஷ் நிறை வுரையாற்றினார். புதிய நிர்வாகிகள் தேர்வு சங்கத்தின் தலைவராக பி.வி.கல் யாணசுந்தரம், பொதுச் செயலாளராக &nbsp;பி. வாசுதேவன், பொருளாளராக எஸ்.டி. ரங்கநாதன் துணைத் தலைவர்களாக கே.மணிகண்டன், இராமாத்தாள் ஜெய ராமன், கே.கிருஷ்ணன், இணைச் &nbsp;செயலாளர்களாக கே.சண்முகசுந்த ரம், ஜான் சுந்தர்ராஜ், எம்.சந்திரசேக ரன், உதவி பொருளாளராக ராஜா &nbsp;ஜான்சன் மற்றும் 24 செயற்குழு உறுப்பி னர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முடி வில் டி.ஜான் சுந்தர்ராஜ் நன்றி கூறினார். &nbsp;இதில் கோவை கோட்டத்தை சேர்ந்த திர ளானோர் பங்கேற்றனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.