தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘பொருளாதார நெருக்கடி காலங்களில் முக்கிய பங்காற்றிய எல்ஐசி’ காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க பவள நிறைவு விழா, குடும்ப சங்கமம்

18 Jul 2026, 9:20 pm
‘பொருளாதார நெருக்கடி காலங்களில் முக்கிய பங்காற்றிய எல்ஐசி’ காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க பவள நிறைவு விழா, குடும்ப சங்கமம்
<p><strong>‘பொருளாதார நெருக்கடி காலங்களில் முக்கிய பங்காற்றிய எல்ஐசி’ காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க பவள நிறைவு விழா, குடும்ப சங்கமம்</strong></p><p>மதுரை, ஜூலை 18- அகில இந்திய காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் மதுரைக் கோட் டம் சார்பில் 75-வது ஆண்டு நிறைவு விழா மற்றும் குடும்ப சங்கமம் சனிக்கிழமை மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள ஐ.எம்.ஏ. அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு சங்கத்தின் துணைத் தலைவர் எஸ்.ரேணுகா தலைமை வகித்தார். இணைச் செய லாளர் எஸ்.முத்துக்குமாரசாமி வர வேற்புரையாற்றினார். தென்மண்டல காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க துணைத் தலைவர் டி.வாஞ்சிநாதன் வாழ்த்தி பேசி னார். தீக்கதிர் சிறப்பு ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கம், தென்மண் டல காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க முன்னாள் பொதுச் செயலாளர் க. சுவாமிநாதன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். தொடர்ந்து, “வேர்களை வாழ்த்தி விழுதுகள்” என்ற நிகழ்ச்சி யில் சங்கத் தலைவர் நா. சுரேஷ் குமார் உரையாற்றினார். விழாவில் முன்னாள் நிர்வாகி கள் மற்றும் அவர்களது குடும் பத்தினர் கௌரவிக்கப்பட்டனர். மேலும், சுடர் மற்றும் கயல் கலைக் குழுவினரின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. பொதுச் செயலாளர் என்.பி. ரமேஷ்கண்ணன் ஒருங்கிணைத் தார். இணைச் செயலாளர் ஆர். ரமேஷ்பாண்டியன் நன்றி கூறி னார். நிகழ்ச்சியில் சுடர் கலைக்குழு தப்பட்டம், நாடகம், கயல் கலைக் குழு சார்பில் மகளிர் நடத்திய சேர்ந்திசை நாடகம், மதுரை போக்குவரத்து கலைவாணர் கலைக்குழு ராயப்பன் பாடல்கள், கல்லூரி மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தீக்கதிர் சிறப்பு ஆசிரியர் மதுக் கூர் ராமலிங்கம் பேசுகையில், “பொதுத்துறை காப்பீட்டுத் துறை யான எல்ஐசி மற்றும் பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் இன்றள வும் மக்களின் நம்பிக்கையை பெற்ற நிறுவனங்களாக தொடர்வ தற்கு, அவற்றின் பொருளாதார வலிமை மட்டுமல்ல, காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் பல ஆண்டு களாக நடத்திய போராட்டங்களும் முக்கிய காரணமாக உள்ளன” என்றார். எல்ஐசியின் இரு கரங்கள் ஒரு தீபத்தை பாதுகாக்கும் சின்னம், மக்களின் வாழ்க்கையையும் அவர் களின் குடும்பங்களின் எதிர் காலத்தையும் பாதுகாக்கும் உய ரிய நோக்கத்தை வெளிப்படுத்து வதாகக் குறிப்பிட்ட அவர், அந்த தீபத்தை பாதுகாத்த கரங்களாக தொழிற்சங்கத் தலைவர்கள் திகழ்ந்துள்ளனர் என்றார். இந்திய பொருளாதாரத்திற்கு நெருக்கடி ஏற்படும் காலங்களில் கூட எல்ஐசி முக்கிய பங்காற்றி வரு வதாகக் குறிப்பிட்ட அவர், நாட்டின் பொருளாதார நிலைத்தன்மைக் கும் மக்களின் நம்பிக்கைக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் அவ சியமானவை என்றார். தென் மண்டல காப்பீட்டு கழக ஊழியர் சங்க முன்னாள் பொதுச் செயலாளர் க.சுவமிநாதன் பேசு கையில். அகில இந்திய இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்கத்தின் 75 ஆண்டுகால பயணம் வெறும் தொழிற்சங்க வரலாறு மட்டுமல்ல; இந்திய அரசியல், பொருளாதா ரம் மற்றும் சமூக நீதி இயக்கங்க ளோடு இணைந்த வரலாறு என்று குறிப்பிட்டார். மதுரை கோட்ட காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தை வளர்த்தெடுத்த ஆர்.கே., தண்டபாணி, சுந்தரக்கண் ணன் உள்ளிட்ட முன்னோடித் தலை வர்களின் தியாகம், தொலை நோக்கு சிந்தனை மற்றும் தலை முறை உருவாக்கும் பணியை நினைவுகூர்ந்த அவர், சங்க வளர்ச்சிக்கு அதிகாரப்பூர்வ பொறுப்பில் இல்லாத பலரும் அளப்பரிய பங்களிப்பை வழங்கிய தாக பாராட்டினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.