எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
31 Jan 2026, 5:27 pm
<p><strong>எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>சென்னை, ஜன.31 - நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்பு அமலாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிப்.12 அன்று அகில இந்திய பொது வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில்வாரி சம்மேளனங்கள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்கின்றன. இதனையொட்டி பிரச்சாரக் கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் வெள்ளியன்று (ஜன.30) சென்னை அண்ணாசாலை எல்ஐசி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், எல்ஐசி ஊழியர் சம்மேளனம், எல்ஐசி முகவர்கள் சங்கம்(லிகாய்) இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தின. இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி மூலதனத்தை 100சதவீதம் உயர்த்தியதை திரும்ப பெற வேண்டும். எல்ஐசி நிறுவனத்தில் மூன்றாம் மற்றும் நான்காம் பிரிவு ஊழியர்களை உடனடியாக நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தலைவர்கள் பேசினர்.</p>
