வேலைவாய்ப்பையும் பணிப்பாதுகாப்பையும் இணைத்த போராட்டம்
1 hour before

வேலைவாய்ப்பையும் பணிப்பாதுகாப்பையும் இணைத்த போராட்டம்

1960களில் கொல்கத்தாவில் நடைபெற்ற ‘இலாகோ விஜில்’ இயந்திரமய எதிர்ப்புப் போராட்டம், ஊழியர்களின் பணிப் பாதுகாப்பை இளைஞர்களின் வேலைவாய்ப்போடு இணைத்து சமூக ஆதரவைத் திரட்டியது என்று சங்கத்தின் முன்னாள் அகில இந்தியத் துணைத் தலைவர் “திண்டுக்கல்” ஆர். நாராயணன் அவர்கள் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்வார். எல்.ஐ.சி நிர்வாகத்தின் முன்னெடுப்பில் வெளியான, அதன் வரலாற்றைப் பேசும் ‘Tryst with Trust’ நூலின் முகப்புரையில் சங்கத்தின் முன்னாள் தலைவர் சந்திரசேகர போஸ் அவர்களின் பெயரும் நன்றியோடு இடம் பெற்றுள்ளது. இப்போராட்டம் நடுத்தர வர்க்கத் துறைகளில் இயந்திரமயமாக்கலைப் பல ஆண்டுகள் தள்ளிப்போட்டது. இதன் தாக்கம் 1967 பொதுத்தேர்தலில் எதிரொலித்து, அரசியல் கட்சிகள் வேலைவாய்ப்பைப் பறிக்கும் இயந்திரமயத்தைக் கொண்டுவர மாட்டோம் எனத் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் அறிவிக்கச் செய்தது.

அரசியலையும் வாழ்க்கையையும் பிரிக்க முடியாது என்ற முழக்கம்

1963 மதுரை மாநாட்டில் 26 வயதில் தென்மண்டலப் பொதுச் செயலாளராக தோழர் என்.எம்.சுந்தரம் தேர்வு செய்யப்பட்டார். அவர் ஊதிய உயர்வு மற்றும் பணவீக்கம் பற்றிப் பேசியபோது, சிலர் “அரசியல் பேசக் கூடாது, ஊழியர் பிரச்சினை மட்டும் பேசுங்கள்” எனத் தடுத்தனர். அப்போது அவையிலிருந்த முதுபெரும் தலைவர் மோகன் குமாரமங்கலம் எழுந்து, “பணவீக்கம் உங்கள் வாங்கும் சக்தியை அரிக்கும்போது, அது எப்படி உங்களுக்குச் சம்பந்தமில்லாததாகும்? அதைத் தடுப்பதே அரசியல்” என்று கூறி, சுந்தரத்தைத் தொடர்ந்து பேச ஊக்குவித்தார்.