தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விழுப்புரத்தில் எல்ஐசி முகவர்களின் கமிஷன் மீதான ஜிஎஸ்டி வரியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

9 Oct 2026, 1:34 am
விழுப்புரத்தில் எல்ஐசி முகவர்களின் கமிஷன்  மீதான ஜிஎஸ்டி வரியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் எல்ஐசி முகவர்களின் கமிஷன் மீதான ஜிஎஸ்டி வரியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

விழுப்புரம், அக். 8 –விழுப்புரம் எல்ஐசி கிளை அலுவலகம் முன்பு, முகவர்களின் கமிஷன் தொகையில் 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதைக் கண்டித்து லிகாய் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிளை செயலாளர் ஆர். குமார் தலை மையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் 65-க்கும் மேற்பட்ட முகவர்கள் கலந்து கொண்டு ஜிஎஸ்டி பிடித்தம் செய்யும் முடிவைத் திரும்பப் பெற வலியுறுத்தினர்.

வேலூர் கோட்ட பொதுச் செயலாளர் எஸ்.ரமேஷ் மற்றும் கோட்ட கல்விகுழு கன்வீனர் டி.புண்ணியமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர். அப்போது எல்ஐசி பங்குகளை விற்பனை செய்யக்கூடாது, குறைக்கப்பட்ட கமிஷன் தொகையை உயர்த்தி தர வேண்டும், முகவர்களுக்குக் காப்பீடு வழங்க வேண்டும், பீமாசுகம் செயலியைத் தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலி யுறுத்தப்பட்டன. கிளை தலைவர் ஆர். பரசுராமன், பொருளாளர் வி. ஜெய பாலன் மற்றும் இணை செயலாளர் கே. தினேஷ்பாபு உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.