அடையாள அட்டை வழங்கக்கோரி எல்ஐசி முகவர்கள் ஆர்ப்பாட்டம்
8 Oct 2026, 10:52 pm
<p><strong>அடையாள அட்டை வழங்கக்கோரி எல்ஐசி முகவர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>திருநெல்வேலி, அக்.8-முகவர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும். ‘சூப்பர் சேல்ஸ் சாத்தி’ (Super Sales Sathi) அணுகுதலைஎளிமையாக்கி தர வேண்டும். அனைத்து முகவர்களுக்கும் மருத்துவக் காப்பீடு வசதியை அறிமுகப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாளையங்கோட்டையில் உள்ள எல்ஐசி கோட்ட அலுவலகம் முன்பு எல்ஐசி முகவர்கள் சங்கம் ( லிக்காய்)சார்பில் வியாழக்கிழமையன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் எடிசன் தலைமை தாங்கினார். கோட்ட கௌரவத் தலைவர் நடராஜன் துவக்கி வைத்துப் பேசினார். கோரிக்கைகளை விளக்கி கோட்ட பொதுச் செயலாளர் குழந்தைவேலுபேசினார். கிளைச் செயலாளர் லட்சுமி நாராயணன் மற்றும் பலர் பங்கேற்றனர். </p>
