தென்காசியில் எல்ஐசி முகவர்கள் ஆர்ப்பாட்டம்
8 Oct 2026, 10:53 pm
<p><strong>தென்காசியில் எல்ஐசி முகவர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>தென்காசி, அக். 08-எல்ஐசி முகவர்களின் பணிச்சுமையை குறைத்து, விற்பனை நடவடிக்கைகளை எளிமைப்படுத்த வேண்டும். பிரிமியம் பாயிண்டுகளில் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த சேவைகளை மீண்டும் வழங்க வேண்டும். அனைத்து முகவர்களுக்கும் மருத்துவக் காப்பீட்டு வசதி ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்தியஎல்ஐசி முகவர் சங்கம் சார்பில் தென்காசி கிளை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p><p>ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத் தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர் இசக்கி பாண்டியன், நெல்லை கோட்டப் பொருளாளர் கனகராஜ், கிளைப் ொருளாளர் மாடசாமி, கோட்டத் துணைத் தலைவர் கே.சி. சுப்பையா ஆகியோர் பேசினர்.</p>
