முந்தய பக்கம்

குறைக்கப்பட்ட கமிஷனை வழங்க எல்ஐசி முகவர்கள் கோரிக்கை

9 Oct 2026, 2:08 am
குறைக்கப்பட்ட கமிஷனை வழங்க எல்ஐசி முகவர்கள் கோரிக்கை

குறைக்கப்பட்ட கமிஷனை வழங்க எல்ஐசி முகவர்கள் கோரிக்கை

தருமபுரி, அக்.8-குறைக்கப்பட்ட கமிஷனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கத்தினர் தருமபுரி எல்ஐசிஅலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

‘சூப்பர் சேல்ஸ் சாத்தி’ அணுகுதலை எளிமையாக்க வேண்டும். பிரீமியம் பாயிண்டுகளில் ஏற்கனவே இருந்த

சேவைகளை மீண்டும் வழங்க வேண்டும். எல்ஐசி முகவர்களின் குறைக்கப்பட்ட முதலாண்டு கமிஷனை மீண்டும் வழங்க வேண்டும். அனைத்து முகவர்களுக்கும் மருத்துவக்காப்பீடு வசதியை அறிமுகப்படுத்த வேண்டும். எல்ஐசி நேரடி சந்தைப்படுத்துலை நிறுத்த வேண்டும். பீமா சுகம் எக்சேஞ்ச் மற்றும் போர்ட்டபிலிட்டி செயல்படுத்தக்கூடாது. எல்ஐசி முகவர்களுக்கு நலநிதி மற்றும் முறையான ஓய்வூதிய திட்டத்தை தொடங்க வேண்டும். முகவர்களின் குழுக்காப்பீட்டு வயது வரம்பை நீக்கி, முகவர்கள் பணியில் உள்ள வரை காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கத்தினர் வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி எல்ஐசி அலுவலகம் முன்பு நடைபெற்றஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் கிளைத் தலைவர் ரமேஷ்குமார் தலைமை வகித்தார். இதில், கோட்டச் செயலாளர் சிவமணி, கிளைச் செயலாளர் ஸ்ரீதரன், நிர்வாகிகள் போத்தன், வீரப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram