தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

டிச. 1 - சிஐடியுவின் தில்லி முற்றுகைப் போராட்டத்தில் திரளாக பங்கேற்போம்! எல்ஐசி முகவர்கள் சங்கம் (லிகாய்) அறிவிப்பு

25 Sept 2026, 9:34 pm
டிச. 1 - சிஐடியுவின் தில்லி முற்றுகைப் போராட்டத்தில் திரளாக பங்கேற்போம்! எல்ஐசி முகவர்கள் சங்கம் (லிகாய்) அறிவிப்பு

டிச. 1 - சிஐடியுவின் தில்லி முற்றுகைப் போராட்டத்தில் திரளாக பங்கேற்போம்! எல்ஐசி முகவர்கள் சங்கம் (லிகாய்) அறிவிப்பு

சென்னை, செப். 25 -பொதுத்துறை நிறுவனங்களைப் பாதுகாக்கவும், தொழிலாளர்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தியும் சிஐடியு சார்பில் டிசம்பர் 1 அன்று நடைபெறவுள்ள ‘தில்லியை கைப்பற்றுவோம்’போராட்டத்தில் அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கம் (லிகாய்) திரளாகப் பங்கேற்கும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.

எல்ஐசி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் நடவடிக்கைகளை ஒன்றிய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்என்றும் இக்கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சென்னையில் நடைபெற்ற அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் (லிகாய்) மாநிலக்குழு கூட்டம், மாநிலத்தலைவர் எஸ்.ஏ. கலாம், மாநிலச் செயல் தலைவர் அ. பூவலிங்கம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில்மேற்கொண்ட முடிவுகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

முன்னதாக, மாநிலச் செயல் தலைவர் அன்பு ஆர். நடராஜன் அஞ்சலி தீர்மானத்தை முன்வைத்தார். தலைமை நிலையச் செயலாளர் டி.கே. வெங்கடேசன் வரவேற்றார். தலைமை நிலையச்செயலாளர் என். ராஜா, இன்சூரன்ஸ் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்துப் பேசினார். மாநிலச் செயலாளர்ப. குமார் வேலை அறிக்கையை யும், பா. ராஜேஷ் வரவு செலவு அறிக்கையை யும் சமர்ப்பித்தனர்.கூட்டத்தில் அகில இந்திய செயலாளர் பி.ஜி. திலீப், தென்மண்டலத் தலை வர் ஏ.வி. பெல்லார்மின், தென் மண்டலச்செயலாளர் சுதாகரன், செயல் தலைவர் செல்வராஜ், சிஐடியு மாநிலச் செயலாளர் வி.குப்புசாமி ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.இக்கூட்டத்தில், முகவர்களுக்கான கமிஷன் குறைப்பைக் கண்டித்து அக்டோபர் 1 அன்று கருப்புப் பட்டை அணிந்துஎதிர்ப்பு தெரிவிப்பது, கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 8 அன்று அனைத்து எல்ஐசி கிளைகளின் முன்பும்ஆர்ப்பாட்டம் நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது. மேலும், தென்மண்டல 6-ஆவது மாநாட்டை 2027 பிப்ரவரி 15, 16தேதிகளில் தஞ்சையில் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.