முந்தய பக்கம்

அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் (லிகாய்) 5

5 Jul 2026, 10:40 pm
அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் (லிகாய்) 5
<p>அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் (லிகாய்) 5 ஆவது மாநில மாநாடு, திருப்பூரில் ஜூலை 24, 25 ஆகிய இரு நாட்கள் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இம்மாநாட்டிற்கான இலச்சினை ஞாயிறன்று வெளியிடப்பட்டது. இந்த இலச்சினையை லிகாய் கோட்ட செயல் தலைவர் பூமிநாதன் வெளியிட, சிஐடியு மாநிலச் செயலாளர் கே.ரங்கராஜ், மாநிலக்குழு உறுப்பினர் ஜி.சம்பத் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில், சங்கத்தின் கோட்டத் தலைவர் பிரேம்குமார், செயலாளர் பழனி, மாநில கல்வி கன்வீனர் ராஜேஷ், கோட்ட மகளிர் பிரிவு கன்வீனர் மாலதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram