ஆயுள் காப்பீட்டுக் கழக முகவர் சங்க மதுரைக் கோட்ட மாநாடு
18 Jul 2026, 9:18 pm
<p><strong>ஆயுள் காப்பீட்டுக் கழக முகவர் சங்க மதுரைக் கோட்ட மாநாடு</strong></p><p>மதுரை, ஜூலை 18- அகில இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக முகவர் சங் கத்தின் மதுரை கோட்டத்தின் 7-வது மாநாடு, சனிக்கிழமை மதுரையில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு, சங்கத் தின் கோட்டத் தலைவர் எஸ். கே.சுப்ரமணிய ராஜா தலை மை வகித்தார். கோட்ட செயல் தலைவர் கே.சுப்பையா வர வேற்று பேசினார். தொட ர்ந்து சிஐடியு தென்மண்டல செயல் தலைவர் எம்.செல்வ ராஜ் மாநாட்டைத் துவக்கி வைத்து உரையாற்றினார். தொடர்ந்து மதுரை மாந கராட்சி பொறுப்பு மேயர் தி. நாகராஜன், சிஐடியு மாநில குழு உறுப்பினர் இரா.தெய்வ ராஜ், எல்ஐசி மதுரை 1 முதுநிலை கோட்ட மேலாளர் இரா.சூரஜ்குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கோட்டத் துணைச் செயலாளர்கள் எஸ்.பிரபாகரன், சத்யசீலன், கோட்ட துணைத் தலைவர் எம்.ஆர்.வெங்கட் நாராயண ராஜா, என்.ஐ.எப்.ஐ.டபிள்யு.ஐ கோட்டப் பொதுச் செயலா ளர் எம்.அருண்குமார், மாநி லச் செயலாளர் என்.ராஜா ஆகியோர் பேசினர். மாநிலக் குழு உறுப்பினர் எம்.பி. கர்ணன் நன்றி கூறினார். தொடர்ந்து நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாட்டிற்கு எஸ்.கே.சுப்ரமணிய ராஜா தலைமை வகித்தார். சிஐடியு மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.லெனின் துவக்கவுரை ஆற்றினார். கோட்ட பொதுச்செயலாளர் கே.மாரி, கோட்ட பொருளா ளர் ஏ.அருள்தாஸ் ஆகியோர் அறிக்கை சமர்ப்பித்தனர். நிறைவு செய்து தமிழ் மாநி லத் தலைவர் ஏ.பூவலிங்கம் பேசினார். கோட்டத் தலைவராக எஸ்.குருசாமி, செயலாள ராக கே.மாரி, பொருளாள ராக என்.முத்துராஜ், துணைத் தலைவர்களாக எம்.பி.கண் ணன், எஸ்.பிரபாகரன் சத்ய சீலன், எஸ்.ராஜா, ஆர்.கீதா, துணைச் செயலாளர்களாக ஜி.மகுடபதி, கே.ரேணுகா தேவி, எஸ்.ஆனந்தகிருஷ் ணன், எஸ்.கே.சுப்ரமணிய ராஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பொதுத்துறையை தனி யார்மயமாக்கும் கொள்கை யை ஒன்றிய அரசும் எல்ஐசி நிர்வாகமும் கைவிடக் கோரியும், எல்ஐசியின் பங்குகளை விற்க எதிர்ப்பு தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.</p>
