50 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கும் நூலகம் நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
16 Nov 2025, 3:30 pm
<p><strong>50 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கும் நூலகம் நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு</strong></p>
<p>மயிலாடுதுறை, நவ.16- மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் 17 ஏக்கருக்கும் மேல், அரசுக்குச் சொந்தமான இடங்கள் இருந்தும், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை கட்டிடத்திலேயே நூலகம் இயங்குகிறது. நூறாண்டைக் கடந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கென விளையாட்டு மைதானம் இல்லாததால், மாணவர்கள் பள்ளியில் விளையாடாத நிலையும் உள்ளது. சட்டசபையில் 110 ஆவது விதியின் கீழ் அறிவிக்கப்பட்டும், இதுவரை துணைமின் நிலையம் அமைக்கப்படாத அவல நிலையும் நீடித்து வருகிறது. தொடர்ந்து கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானங்கள் நிறை வேற்றியும், உங்களுடன் ஸ்டாலின், குறைதீர்க்கும் முகாம், உள்ளிட்ட அரசு முகாம்களில் கோரிக்கை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை யென்றும் உடனடியாக மக்கள் நலன் சார்ந்த கோரி க்கைகள் மீது நடவடிக்கை கோரி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம், திருக்கடையூர் முன்னாள் ஊராட்சி தலைவர் அமுர்த.விஜயக்குமார் மனுவை அளித்துள்ளார். தருமபுரம் ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அபிராமி அம்மன் கோவிலில், பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகமும், ஊராட்சி நிர்வாகமும் இதுவரை முற்றிலும் செய்துதராத நிலையில் சுகாதாரம், குடிநீர், கழிப்பிட வசதி என எந்தவித அடிப்படையான வசதிகளும் இல்லாத திருக்கடையூரில், அரசுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான இடங்கள் கோவில் ஆக்கிரமிப்பிலேயே பல ஆண்டுகளாக உள்ளது. கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டும் கோவில் நிர்வாகம் அரசு புறம்போக்கு இடங்களை கோவில் இடம் எனக் கூறி வாடகை வசூலிப்பதும், அதில் குடியிருக்கும் ஏழைகளிடம் மின்சார வசதிபெற “தடையில்லா சான்று’’ அளிக்க பெரும் தொகை கேட்கும் அவல நிலையும் நீடிக்கிறது. குறிப்பாக ஊராட்சி க்கு சொந்தமான ஆணைக்குளம் பகுதியில் பல ஆண்டுகளாக குடியிருக்கும் பழங்குடியின சமூக குடும்பத்தினரிடம் மின் இணைப்பு பெற பல ஆயிரங்களை கேட்டு தராததால் இதுவரை மின்சார வசதியின்றி தவிக்கின்றனர். அரசின் வளர்ச்சி திட்டங்களை செய்திடவும், திருக்கடையூரில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளவும் பல ஏக்கர் கணக்கில் அரசுக்கு சொந்தமான இடங்கள் இருந்தும் அவற்றையெல்லாம் கோவில் நிர்வாகம் சொந்தம் கொண்டாடுவதை தடுத்து நிறுத்தி, ஆக்கிரமிப்பில் உள்ள இடங்களை மீட்டு கிடப்பில் உள்ள அரசு திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். திருக்கடையூர் ஊராட்சிக்கு சொந்தமான ஆக்கிரமிப்பில் உள்ள அனைத்து குளங்களையும் மீட்டு, ஊராட்சியில் சேர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் திருக்கடையூரில் நடந்த அரசு விழா ஒன்றில் முன்னாள் ஊராட்சி தலைவர் அமுர்த.விஜயக்குமார் கோரிக்கை மனு அளித்துள்ளார்.</p>
