பொங்கல் தினத்தன்று பட்டய கணக்காளர் தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றக் கோரி சு.வெங்கடேசன் எம்.பி., கடிதம்
21 Dec 2025, 3:21 pm
<p><strong>பொங்கல் தினத்தன்று பட்டய கணக்காளர் தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றக் கோரி சு.வெங்கடேசன் எம்.பி., கடிதம் </strong></p>
<p>மதுரை: இந்தியப் பட்டய கணக் காளர் (சிஏ) கழகத்தின் தேர்வுகள் அடுத்தாண்டு (2026) ஜனவரி மாதம் முதல் மற்றும் 2ஆவது வாரத்தில் நடை பெற உள்ளது. அதாவது ஜனவரி 6 முதல் 17ஆம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக இந்த தேர்வு நடைபெற உள்ளது. இந்த காலகட்டம் தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை நாட்கள் ஆகும். பொங்கல் பண்டிகை நேரத்தில் சிஏ தேர்வு நடத்தப்படுவதால் அவற்றை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது. இந்நிலையில், பொங்கல் அன்று நடைபெற உள்ள சிஏ தேர்வுகள் தேதியை வேறு தேதிக்கு மாற்றம் செய்யக் கோரி இந்தியப் பட்டய கணக்காளர் கழகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “அகில இந்தியத் தேர்வுகளுக்கு தேதிகள் நிர்ணயிக்கும் அமைப்புகள் ஏன் எப்போதுமே தமிழ்நாட்டின் உணர்வு களை கணக்கில் கொள்வதில்லை என்ற கேள்வி எழுகிறது. பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் திருநாள் (2026 ஜன வரி 15, 16, 17) நாட்களில் இந்தியப் பட்டய கணக்காளர் கழகம் இடையீட்டு, இறுதித் தேர்வுகளை அறிவித்துள்ளது. இது தேர்வர்களுக்கு கடும் சிரமங்களை உருவாக்குமென என்னிடம் முறையீடுகள் வந்தன. தமிழ் மக்களின் பண்பாட்டு திருவிழாவாக, விவசாயப் பெருங்குடி மக்களின் உணர்ச்சிமிக்க பெரு விழாவாக திகழும் பொங்கல் திருநாட்களில் அறிவிக்கப்பட்ட தேர்வு களை மாற்றி அட்டவணையை அறிவிக்குமாறு கேட்டு இந்தியப் பட்டய கணக்காளர் கழக தலைவர் சரண் ஜோத் சிங் நந்தா அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன்” என சு.வெங்க டேசன் குறிப்பிட்டுள்ளார்.</p>
