தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மதச்சார்பின்மையைப் பாதுகாக்க ஓரணியில் திரள்வோம்!

10 Apr 2026, 5:30 am
மதச்சார்பின்மையைப் பாதுகாக்க ஓரணியில் திரள்வோம்!

மதச்சார்பின்மையைப் பாதுகாக்க ஓரணியில் திரள்வோம்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ள நிலையில், நாட்டின் பன்முகத்தன்மையையும் சிறுபான்மை மக்களின் உரிமைகளையும் பாதுகாக்க 'மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி' வேட்பாளர்களைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு அறைகூவல் விடுத்துள்ளது.

தமிழகத்தின் 7 கோடி மக்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இந்தத் தேர்தலில் இரண்டு முக்கிய அணிகள் களத்தில் உள்ளன. ஒன்று, இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள மதச்சார்பின்மைக் கொள்கையைப் பாதுகாக்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி. மற்றொன்று, வெறுப்பரசியலையும் வகுப்புவாதத்தையும் முன்னெடுக்கும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி.

கடந்த பத்து ஆண்டுகளாக ஒன்றிய பா.ஜ.க அரசு இந்தியத் திணிப்பு, மாநில உரிமைகள் பறிப்பு மற்றும் நிதிப் புறக்கணிப்பு ஆகியவற்றின் மூலம் தமிழ்நாட்டைத் தண்டித்துச் சிதைத்து வருகிறது. கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கைகளால் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பைத் திண்டாட்டம் என மக்கள் பொருளாதார நெருக்கடியில் தவிக்கின்றனர்.

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பசுப் பாதுகாப்பு, லவ் ஜிகாத் போன்ற போலி காரணங்களைக் கூறி சிறுபான்மை மக்கள் மீது கும்பல் வன்முறைகள் ஏவி விடப்படுகின்றன. வழிபாட்டுத் தலங்களும் தங்கும் விடுதிகளும் சட்டவிரோதமாக இடிக்கப்படுகின்றன. இத்தகைய வகுப்புவாதச் செயல்களுக்கு அ.தி.மு.க துணை போவது கண்டிக்கத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.