தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வன்முறைக் கும்பலிடமிருந்து வழிபாட்டுத் தலங்களை பாதுகாப்போம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்

2 Dec 2025, 12:27 pm
வன்முறைக் கும்பலிடமிருந்து வழிபாட்டுத் தலங்களை பாதுகாப்போம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்

தமிழ்நாட்டில் ஒரு நிரந்தரமான பகைமைச் சூழலை உருவாக்க முயற்சிக்கும் அராஜகக் கும்பலின் தூண்டுதலுக்கு எதிராக அனைத்து அரசியல், சமூக பண்பாட்டு இயக்கங்களும்  உறுதியாக நிற்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் புதுக்கோட்டையில் டிசம்பர் 2, 3 தேதிகளில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி தலைமையில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயலாளர் பெ.சண்முகம், மத்திய கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், கே.பாலபாரதி உள்ளிட்ட மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மக்களின் நம்பிக்கையை பகை உணர்வாக மாற்றி அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தும் இந்துத்துவா மதவெறிக் கூட்டம் சமீப ஆண்டுகளில் இதை ஒரு தொடர் தொழிலாகவே செய்து வருகின்றது. அதன் தொடர்ச்சியாகவே, கடந்த பல ஆண்டுகளாக திருப்பரங்குன்றம் மலையில் இதுவரையிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படாத சிக்கந்தர் தர்ஹாவிற்கு அருகே தீபம் ஏற்றவேண்டும் என்று முயற்சித்து வருகிறது. அயோத்தி,  மதுரா, காசி, சம்பல் என்று ஒவ்வொரு இடத்திலும் புதிது புதிதாக சர்ச்சைகளை உருவாக்கி மக்களுக்கு இடையே பகைமூட்டி அரசியல் அறுவடை செய்து வரும் இந்தக் கூட்டம் இப்போது திருப்பரங்குன்றம் மலையையும் குறிவைத்துள்ளது.

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவதை யாரும் தடுக்கவில்லை. தீபம் ஏற்றுவது தொடர்பாக இப்போது உள்ள நடைமுறை தொடர வேண்டும் என்று இரண்டு நீதிபதிகள் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு ஏற்கனவே ஒரு தீர்ப்பை கூறியுள்ள நிலையில்,  அதற்கு நேர் எதிராக தற்போது (டிச.1) சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ‘இந்த ஆண்டு முதல் கார்த்திகை தீபம் மலை உச்சியிலும் ஏற்றப்பட வேண்டும்” என்று தீர்ப்பளித்துள்ளார். ஏற்கனவே, உச்சிப் பிள்ளையார்கோவில் அருகில் தீபம் ஏற்றிவரும் நிலையில், ‘இந்த ஆண்டு முதல்’ என்று கூறியிருப்பதில் இருந்தே,  இதுவரையிலும் அந்த இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்படவே இல்லை என்பது தெளிவாகிறது.

திருப்பரங்குன்றம் சார்ந்த இவர்களின் உத்தி புதிதல்ல. மதவெறிக் கூட்டத்தின் வாடிக்கையான விஷம் தோய்ந்த உத்திதான் இது. பல்வேறு இடங்களில் வழிபாட்டுத்தலத்தை முன்னிறுத்தி, மக்களின் பக்தி மற்றும் மத நம்பிக்கையை மூலப்பொருளாக்கி அரசியல் லாபம் அடைந்துள்ளனர். அதையே, தமிழகத்தில் நடத்திப் பார்க்க முனைந்துள்ளனர். எனவே நடப்பது வெறும் தீபம் ஏற்றுவது குறித்த பிரச்சனை அல்ல;  ஆழமான அரசியல் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.

இது மக்கள் நம்பிக்கை வழிபாடு சார்ந்த தீர்ப்பல்ல. மாறாக இந்தியாவின் வடபகுதியில் வழிபாட்டுத் தலங்களை முன்வைத்து மக்களிடம் மோதலை உருவாக்கி அரசியல் லாபத்தை அறுவடை செய்வதற்கான முயற்சி.  பாபர் மசூதி உள்ளிட்ட பிரச்சனைகளிலும் மோதலுக்கு வழிவகுக்கும் இத்தகைய முடிவுகளை நீதிமன்றமோ நிர்வாகத்தின் ஒரு பகுதியோதான் முதலில் துவக்கி வைத்தது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது. எனவே, இந்த தீர்ப்பு சமய வழிபாடு சார்ந்து நல்லெண்ணத்தோடு வழங்கப்பட்டதாக மார்க்சிஸ்ட் கட்சி கருதவில்லை. எனவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு இந்த தீர்ப்பை வன்மையாக கண்டிக்கிறது.

மதநல்லிணக்கத்திற்கு நல்லதொரு உதாரணமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகின்றது. இதைச் சிதைப்பதன் மூலம் தொடர்ந்து  மோதலும், பகைமையும் உருவாக்கப்பட்டு தாங்கள் அரசியல் அறுவடை செய்ய முடியும் என்று கருதுகின்ற இந்துத்துவா கூட்டத்திற்கு இது வாய்ப்பை அளிப்பதாக உள்ளது.  இந்த கூட்டம் இட ஒதுக்கீடு, பெண்ணுரிமை, சமூக ஒற்றுமை, நிலச் சீர்திருத்தம், மாநில உரிமைகள், மக்கள் நலன் உள்ளிட்டு எந்த ஒரு முன்னேற்றத்திலும் பங்களிப்பு செய்யாத அதே சமயம், இவற்றுக்கு எதிராகவே நின்று வந்திருக்கிறது என்பதை தமிழ்நாடு அறியும்.

இவர்களுக்கு உதவும் வகையிலேயே இத்தீர்ப்பு அமைந்திருப்பது தற்செயலானது என்று கருத முடியாது. இந்த தீர்ப்பு நல்ல நோக்கத்திலும் சட்டத்தின் அடிப்படையிலும் வழங்கப்பட்டது அல்ல. எனவே, இத்தீர்ப்பை தமிழ்நாடு அரசு அமல்படுத்தக் கூடாது. உரிய முறையில் இந்த தீர்ப்பை சட்டப்படி ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்கிற மகத்தான பாரம்பரியத்தை உயர்த்திப் பிடிக்கும் முற்போக்குத் தமிழ் மரபின் பாதுகாவலர்களாகிய தமிழ்நாட்டு மக்கள் வழக்கம்போல மத நல்லிணக்கத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டும். கலவரத் திட்டங்களுக்கு இரையாகக் கூடாது. பகைமையையும், கலவரத்தையும் தூண்டும் நபர்களையும் அமைப்புகளையும் முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

தமிழ்நாட்டில் ஒரு நிரந்தரமான பகைமைச் சூழலை உருவாக்க முயற்சிக்கும் அராஜகக் கும்பலின் தூண்டுதலுக்கு எதிராக அனைத்து அரசியல், சமூக பண்பாட்டு இயக்கங்களும்  உறுதியாக நிற்க வேண்டும். மக்களின் ஒற்றுமை பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.