முந்தய பக்கம்

மோடி அரசை பின்வாங்க வைப்போம்!

15 Dec 2025, 2:48 pm
மோடி அரசை பின்வாங்க வைப்போம்!
<p><strong>மோடி அரசை பின்வாங்க வைப்போம்!</strong></p> <p>முதலமைச்சர் ஸ்டாலின் சூளுரை சென்னை, டிச. 15 - &nbsp;மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தை சிதைக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டா லின், தமது சமூகவலைதள பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தமது பதிவில் தெரிவித்திருப்பதாவது: &nbsp;தேசத்தந்தை காந்தியடிகளின் மீதுள்ள வன்மத்தால் அவர் பெயரைத் தூக்கிவிட்டு, வாயில் நுழையாத வட மொழிப் பெயரை திணித்திருக்கிறார்கள். நூறு சதவிகிதம் ஒன்றிய அரசின் நிதியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்துக்கு இனி 60 சதவிகிதம் மட்டுமே நிதி ஒதுக்கு வார்களாம். இவை அனைத்துக்கும் மேலாக, நாட்டி லேயே வறுமையை முழுமையாக ஒழித்து சாதனை படைத்தோம் என்பதற்காகவே நம் தமிழ்நாடு தண்டிக்கப்பட உள்ளது. வறுமை இல்லாத மாநிலம் என்பதற்காக, இருப்பதிலேயே குறைவாகத்தான் இத்திட்டத்தின் பயன்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைக்குமாம். பல கோடிப் பேரை வறுமையின் பிடி யில் இருந்து மீட்டு, மாண்புடன் வாழ வழி வகுத்த ஒரு திட்டத்தை ஆணவத்துடன் அழிக்கப் பார்க்கிறது ஒன்றிய பாஜக அரசு. மூன்று வேளாண் சட்டங்கள், சாதி வாரிக் கணக்கெடுப்பு போன்றவற்றில் எப்படி பின்வாங்கினீர்களோ, அதே போல ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை சிதைக்கும் முயற்சியிலும் மக்கள் உங்களை நிச்சயம் பின்வாங்க வைப்பார்கள் என்று முதல்வர் எச்சரித்துள்ளார். எனவே, மக்களின் சீற்றத்துக்கு ஆளாகாமல் இப்போதே விபி-ஜி-ராம்-ஜி திட்டத்தை கைவிட வேண்டும். இவ்வாறு முதலமைச்சர் கூறியுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram