முந்தய பக்கம்

வாழ்வில் உயர்வோம்!

24 Jan 2026, 1:00 pm
               வாழ்வில் உயர்வோம்!
<p><strong>வாழ்வில் உயர்வோம்!</strong></p> <p>உண்மை என்றும் உரைப்பாயே! &nbsp;உலகம் வாழ்த்தச் சிறப்பாயே! எண்ணத் தூய்மை கொள்வாயே! &nbsp;எவரும் போற்ற வெல்வாயே! &nbsp;மடமை இருளை மாய்ப்பாயே! &nbsp;மானுட நேயம் காப்பாயே! குடத்துள் விளக்காய் இருக்காமல் &nbsp;குன்றின் ஒளியாய்த் திகழ்வாயே! &nbsp; கற்றோர் நெஞ்சம் களிப்புறவே &nbsp;கடமை நாளும் ஆற்றிடுவாய்! முற்றும் நம்மோர் பண்பாட்டை &nbsp;முனைப்பாய்க் காத்து மகிழ்வாயே! &nbsp;கேடுகள் செய்திட எண்ணாதே! &nbsp;கீழ்மைப் போக்கினை விரும்பாதே! ஈடிலா நற்புகழ் எய்தியுமே &nbsp;எதிலும் முதலிடம் வகிப்பாயே! &nbsp;குறளின் கருத்துகள் உணர்வாயே! &nbsp;கொள்கைத் தடத்தில் உயர்வாயே! அறத்தின் வழியில் நிற்பாயே! &nbsp;அனைத்தும் விரும்பிக் கற்பாயே!</p>
Share
FacebookXWhatsAppTelegram