முந்தய பக்கம்

நடப்போம் நலம் பெறுவோம் திட்ட 2 ஆம் கட்ட தொடக்கம்

13 Mar 2026, 4:52 pm
நடப்போம் நலம் பெறுவோம்  திட்ட 2 ஆம் கட்ட தொடக்கம்
<p><strong>நடப்போம் நலம் பெறுவோம் &nbsp;திட்ட 2 ஆம் கட்ட தொடக்கம்</strong></p> <p>அரியலூர், மார்ச் 13- &nbsp;அரியலூர் சுகாதார மாவட்டத்தில் தொற்றா நோய்களை தவிர்க்கவும், கட்டுப்படுத்தவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்தவும், &ldquo;நடப்போம் நலம் பெறுவோம்&rsquo;&rsquo; திட்டத்தின் முதல் கட்டத்தில் இதுவரை 2088 நபர்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். &nbsp;இந்நிலையில், இத்திட்டத்தின் இரண்டாவது கட்டமாக ஜெயங்கொண்டம் நகராட்சியில், ஜெயங்கொண்டம் அரசு ஆண்கள் மாதிரிப் பள்ளியில் தொடங்கி அரசு மருத்துவமனை, ஜெயங்கொண்டம் வழியாக KKC கல்லூரி வரை நடைபயிற்சி பாதை தேர்ந்தெடுக்கப்பட்டு 8 கிலோமீட்டர் வரை இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. &nbsp;நடைபயிற்சி பாதையில் சிறப்பு மருத்துவ முகாம், ஆங்காங்கே குடிநீர் வசதிகள் நகராட்சியால் செய்யப்பட்டுள்ளன. &ldquo;நடப்போம் நலம் பெறுவோம்&rsquo;&rsquo; நடைபயிற்சி தொடக்க விழாவில், சுகாதாரத்துறை, மருத்துவத் துறையைச் சேர்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் ஆர்வத்துடன் நடை பயிற்சியை மேற்கொண்டனர். &nbsp;ஆரோக்கியமான வாழ்க்கை, உடல் ஆரோக்கியம் மற்றும் பல்வேறு நோய்களிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள நடைபயிற்சி அவசியம் என்பது குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram