போராட்டத்தை வலிமைப்படுத்தி பகத்சிங் கனவு கண்ட புதிய இந்தியாவை உருவாக்குவோம் சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் பேச்சு
10 Nov 2025, 2:46 pm
<p><strong>போராட்டத்தை வலிமைப்படுத்தி பகத்சிங் கனவு கண்ட புதிய இந்தியாவை உருவாக்குவோம் சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் பேச்சு</strong></p>
<p>கோவை, நவ.10 - சிஐடியு மாநில மாநாட்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி சிஐடியுவின் அகில இந்தியத்துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் பேசியதாவது: இன்று இந்திய உழைக்கும் மக்கள் சந்திக்கும் சவால்களை எதிர்கொண்டு முறியடிப்பதற்கு, தொழிலாளர்கள் வாழ்வை நாசமாக்கக் கூடிய, ஜனநாயகத்தை முற்றிலும் பறிக்கக் கூடிய, புதிய, புதிய சட்டங்களை நிறைவேற்றி அடக்குமுறையை ஏவி விடக்கூடிய ஆளும் கூட்டத்தின் நடவடிக்கைக்கு எதிராக இந்திய, தமிழக உழைக்கும் மக்களை ஒன்றுபடுத்தி தொடர்ச்சியாக போராட்டம் நடத்த சிஐடியு முடிவு செய்துள்ளது. பல்வேறு பிரிவு தொழிலாளர்களும் தொடர்ச்சியாகப் போராடி வரும் நிலையில் அவர்களை ஒன்றுபட விடாமல் தடுக்க மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் பிளவுபடுத்த ஒன்றிய அரசு முயல்கிறது. தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், உரிமை மறுக்கப்பட்ட மக்கள் என அனைவரையும் ஒன்றுபடுத்தி மகத்தான போராட்டத்தை நடத்தி, தியாகி பகத்சிங் கனவு கண்ட புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்று அவர் கூறினார்.</p>
