மாணவத் தியாகிகளின் நினைவைப் போற்றுவோம்!
30 Mar 2026, 3:40 pm
<p><strong>மாணவத் தியாகிகளின் நினைவைப் போற்றுவோம்!</strong></p>
<p>மதுரை தியாகராஜர் பொறி யியல் கல்லூரியின் வர லாற்றில் தோழர்கள் சோமசுந்தரம், செம்புலிங்கம் ஆகியோரின் தியாகம், ஆதிக்கத்திற்கும் சித்தாந்தத் திற்கும் இடையிலான போரின் அழி யாத சாட்சியம். 1970-களின் இறுதியில் நடந்த இச்சம்பவம் வெறும் மரண மல்ல; அது ஒரு பெரும் புரட்சியின் தொடக்கம். தூத்துக்குடியின் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த சோமசுந்தரமும், உப்பளத் தொழிலாளியின் மகனான செம்புலிங்கமும் பொறியியல் கல்லூரிக்குள் நுழைந்ததே ஒரு சமூக மாற்றம். அன்று கல்லூரியில் நில விய ராக்கிங் கொடுமை, மாணவர் களைச் சாதி வாரியாகப் பிரிக்கும் கரு வியாக இருந்தது. இதற்கு எதிராக இந்திய மாணவர் சங்கத்தின் கிளை தீவிரமாகப் போராடியது. மார்க்சிஸ்ட் கட்சி திருப்பரங்குன்றம் செயலாளர் தோழர் கந்தசாமி மற்றும் ‘தீக்கதிர்’ நாளிதழ் தந்த அரசியல் தெளிவே மாண வர்களை இயக்கமாகத் திரட்டியது. 1979-இல் நடைபெற்ற மாணவர் பேரவைத் தேர்தலில், திமுக மாண வர் அணியுடன் இணைந்து போட்டி யிட்ட இந்திய மாணவர் சங்கம் அமோக வெற்றி பெற்றது. தோழர் செம்புலிங்கம் பொதுச்செயலாள ராகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியைச் சகித்துக்கொள்ள முடி யாத எதிர்க்கூட்டணியினர், வெளியாட் களுடன் விடுதிக்குள் புகுந்து தாக்கு தல் நடத்தினர். செம்புலிங்கத்தின் கண்களில் மண்ணைத் தூவிச் செய லிழக்கச் செய்து, மிகக் கொடூர மாகக் கொலை செய்தனர். இத்தக வல் அறிந்து தோழர்களைக் காக்க விரைந்த சோமசுந்தரம், வழியிலேயே மறிக்கப்பட்டு கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். பொருளாதார மற்றும் சமூகப் பின்னடைவுகளைத் தாண்டி, சமத்துவத்திற்காகப் போராடிய இந்த 21 வயது இளம் நட்சத்திரங்கள், தியா கராஜர் பொறியியல் கல்லூரியின் ‘சே குவேரா’க்களாக இன்றும் மதிக்கப் படுகின்றனர். அவர்கள் ஏற்றிய தீப்பந்தம், இன்று பல்லாயிரக்கணக் கான மாணவர்களின் கைகளில் இந்திய மாணவர் சங்கத்தின் கொள்கை உறுதியாக ஒளிர்கிறது. சிறகுகளை இழந்த அந்தப் போரா ளிகள் விட்டுச் சென்ற அம்புகள், இன்றும் அதிகார வர்க்கத்தை நோக்கிக் குறி வைத்துள்ளன. </p>
