தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

11 Jan 2026, 2:59 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

திருப்பூர் குமரன் புகழ்  பரவச் செய்வோம்: முதலமைச்சர்

சென்னை: தாய்நாட்டுப் பற்று பெரிதென வாழ்ந்த  திருப்பூர் குமரன் புகழ் நாடெங்கும் பரவச் செய்வோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில்  பதிவிட்டுள்ளார். அந்நிய ஆட்சியின் அடக்குமுறை களை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டு உயிர்துறந்த திருப்பூர் குமரன் நினைவுநாள் இன்று (ஜன.11)! ஈரோடு  ஆட்சியர் அலுவலகத்துக்கு எதிரில் உள்ள சாலைக்கு தியாகி குமரன் சாலை என்றும் பெயர் சூட்டியுள்ளோம். கொடி காத்த குமரன் சிலையை ஈரோட்டில் நிறுவியது திமுக  அரசு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

‘மெட்ரோ ரயில் பணிகள்  நிறுத்தப்படவில்லை’

சென்னை: கோவை, மதுரை மெட்ரோ ரயில் பணிகள்  நிறுத்தப்படவில்லை என சென்னை மெட்ரோ ரயில் நிறு வன மேலாண் இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து சென்னை வடபழனியில் ஞாயிறன்று மெட்ரோ ரயில் திட்டத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மதுரை, கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டத்தை பொறுத்த வரை ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் கடிதம் எழுதி யுள்ளார். ஒன்றிய அரசு கூறியிருந்த தகவல்களை கூடுத லாக சேர்த்து மீண்டும் அனுப்பி உள்ளோம். மதுரை  மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு நிலம் கையகப்படுத்து தல், ஆய்வு செய்யக் கூடிய பணிகள் நிறுத்தப்பட வில்லை. இப்பணிகள் மதுரைக்கு முடிந்துவிட்டன. கோயம்புத்தூருக்கு இன்னும் சில வாரத்தில் முடிந்து விடும். கோயம்புத்தூர், மதுரை மெட்ரோ ரயிலுக்கான பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒன்றிய அரசின்  ஒப்புதலுக்கு காத்திருக்கிறோம்” என்றார்.

கச்சத்தீவு திருவிழா: ஜன.15 முதல் விண்ணப்பம் விநியோகம்

சென்னை: கச்சத்தீவு திருவிழாவில் இந்தியாவில் இருந்து கலந்து கொள்பவர்களுக்கு ஜன.15 - 25 வரை  விண்ணப்பம் விநியோகம் செய்யப்படுகிறது. 5 - 70 வயதுக்குள் இருப்பவர்கள் மட்டுமே திருவிழா வில் கலந்து கொள்ள முடியும் என்றும் வேர்கோடு புனித சூசையப்பர் ஆலயத்தில் விண்ணப்பம் பெற வேண்டும்  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவு புனித அந்தோ ணியார் ஆலய திருவிழா 2026 பிப்.27 ஆம் தேதி மாலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து ஜெபமாலை, இருநாட்டு மக்களும் பங்கேற் கும் சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை ஆகிய  நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அன்று இரவு புனித  அந்தோணியார் சொரூபத்துடன் தேர் பவனி நடைபெறு கிறது. மறுநாள் பிப்.28 ஆம் தேதி காலை 7.30 மணிக்கு சிறப்பு திருப்பலியும், கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெறு கிறது. பிறகு கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. கச்சத்தீவு திருவிழாவில் இலங்கையிலிருந்து 4 ஆயிரம்  பக்தர்களும், இந்தியாவில் இருந்து 4 ஆயிரம் பக்தர்களும்  கலந்து கொள்ள உள்ளனர். அதற்கான ஏற்பாடுகளை இலங்கை அரசு செய்து வருகிறது.

பொங்கல் சிறப்புப் பேருந்துகளில்  2.47 லட்சம் பேர் பயணம்

சென்னை: பொங்கலை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளில் இதுவரை 2.47 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித் துள்ளது. வழக்கமாக இயக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளுடன், பொங்கல் திருநாளையொட்டி சிறப்புப் பேருந்துகளும் கடந்த ஜன.9 ஆம் தேதி முதல்  இயக்கப்பட்டு வருகிறது. இதன்படி, ஜன. 10 ஆம் தேதி நள்ளிரவு 24 மணி நில வரப்படி, வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டதுடன், கூடுதலாக 712  சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன. இவ்வாறு  மொத்தம் 2,804 பேருந்துகள் இயக்கப்பட்டு, 1,26,180 பேர்  பயணம் மேற்கொண்டுள்ளனர். ஜன.9 முதல் ஜன.10 நள்ளிரவு 24 மணி வரை, மொத்தம்  5,510 பேருந்துகள் இயக்கப்பட்டு, 2,47,180 பேர் பயணம்  மேற்கொண்டுள்ளனர். அத்துடன், இதுவரை சென்னையி லிருந்து 2,18,900 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்துக் கழகம் சார்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் கடிதம்

சென்னை: பாமக பெயரைப் பயன்படுத்தி அன்புமணி அதிமுக வுடன் கூட்டணிப் பேச்சு வார்த்தை நடத்தியது சட்டவிரோதம் என  பாமக நிறுவனர் ராம தாஸ் தெரிவித்துள்ளார். கூட்டணி குறித்து பேச எனக்கு மட்டுமே உரிமை உள்ளது. எனவே அன்புமணி மீது  நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் ஆணை யத்திற்கு பாமக நிறு வனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

வைகோ அறிவிப்பு சென்னை: மதிமுக  மாவட்டச் செயலா ளர்கள் கூட்டம் சென் னையில்

ஜனவரி 23 ஆம் தேதி நடைபெறும் என வைகோ அறி வித்துள்ளார். மதிமுக அவைத் தலைவர் ஆ. அர்ஜுனராஜ் தலை மையில் ஜன.23 அன்று  காலை 10 மணிக்கு  மாவட்டச் செயலாளர் கள் கூட்டம் நடைபெற வுள்ளது. கமல்ஹாசன்

கமல்ஹாசன் எம்.பி. வழக்கு

சென்னை: தனது  பெயர், புகைப்படங் களை அனுமதியின்றி வணிக ரீதியில் பயன் படுத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நடி கரும் எம்.பி.,யுமான கமல் ஹாசன் வழக்கு தொ டர்ந்துள்ளார். ‘நீயே விடை’ என்ற நிறுவனம் அனுமதியின்றி தனது  பெயர், புகைப்படங்களை டி-ஷர்ட்களில் அச்சடித்து  விற்று வந்ததை சுட்டிக் காட்டி உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.