முந்தய பக்கம்

‘வாசிப்பை நேசிப்போம்’ சிறப்பு நிகழ்ச்சி

2 Jan 2026, 3:33 pm
‘வாசிப்பை நேசிப்போம்’  சிறப்பு நிகழ்ச்சி
<p><strong>&lsquo;வாசிப்பை நேசிப்போம்&rsquo; &nbsp;சிறப்பு நிகழ்ச்சி</strong></p> <p>கும்பகோணம், ஜன.2 - &nbsp;தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் அறிவகம் என்கின்ற பெயரில் பல்வேறு &nbsp;புத்தகங்களோடு அழகிய நூலகத்தை காவல் ஆய்வா ளர் ரமேஷ் முயற்சியில் அமைத்துள்ளார்கள். &nbsp;இந்நிலையில் கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் அமைந்துள்ள அறிவகம் நூலகத்தில் வாசிப்பு நேசிப்போம் என்கிற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடை பெற்றது. கவிஞர் மு. அய்யூப்கான் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். காவல் நிலையத்தில் நூலகத்தை ஏற்படுத்திய காவல் ஆய்வாளர் ரமேஷுக்கு கவிஞர் ஆட லரசன் சால்வை அணிவித்து சிறப்பித்தார். &nbsp;நூலகத்திற்கு கவிஞர்கள், எழுத்தாளர்கள், நூலாசிரியர்கள் பல்வேறு நூல்களை வழங்கினர்.நூல்கள் சிறப்பு குறித்தும், நூலகங்களின் சிறந்த பணிகள் குறித்தும் காவல் ஆய்வாளர் ரமேஷ் சிறப்புரையாற்றினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram