தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வஞ்சகத்தை முறியடித்து மெட்ரோ திட்டத்தை கொண்டுவந்தே தீருவோம்! ஒன்றிய மோடி அரசுக்கு எதிராக மதுரையில் முழக்கம்!

21 Nov 2025, 2:51 pm
வஞ்சகத்தை முறியடித்து மெட்ரோ திட்டத்தை கொண்டுவந்தே தீருவோம்! ஒன்றிய மோடி அரசுக்கு எதிராக மதுரையில் முழக்கம்!

வஞ்சகத்தை முறியடித்து மெட்ரோ திட்டத்தை கொண்டுவந்தே தீருவோம்!  ஒன்றிய மோடி அரசுக்கு எதிராக மதுரையில் முழக்கம்!

மதுரை, நவ. 21 - கோயம்புத்தூர் மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் அறிக்கையைத் திருப்பி அனுப்பிய நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, மதுரையில் வியாழனன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு, மோடி அரசின் வஞ்சகத்தை முறியடித்து, மெட்ரோ ரயில் திட்டத்தை மதுரைக்கு கொண்டுவந்தே தீருவோம் என முழக்கங்களை எழுப்பினர். மதுரை, பழங்காநத்தம் ஜெயம் தியேட்டர் அருகில், வெள்ளிக்கிழமை (நவ.21) அன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக மாநகர் மாவட்டச் செயலாளர் கோ. தளபதி எம்எல்ஏ தலைமை வகித்தார். திமுக முன்னாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கம், முன்னாள் மேயர் பெ. குழந்தைவேலு, சட்டமன்ற உறுப்பினர் ஆ. வெங்கடேசன், தெற்கு மாவட்டச் செயலாளர் எம். மணிமாறன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம், மாவட்டச் செயலாளர் மா. கணேசன், புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன், மாநிலக் குழு உறுப்பினர்கள் இரா. விஜயராஜன், எஸ்.கே. பொன்னுத்தாய், எஸ். பாலா, மேயர் (பொ) தி. நாகராஜன், காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் வி. கார்த்திகேயன் எம்.சி., சிபிஐ மாவட்டச் செயலாளர் சாமி, மதிமுக எம்எல்ஏ மு. பூமிநாதன், மாவட்டச் செயலாளர் முனியசாமி, மாரநாடு, வந்தியதேவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதலில் சர்வதேச விமான நிலையம்.. இப்போது மெட்ரோவும் மதுரைக்கு மறுப்பு!

ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் பேசுகையில்:  “கோவை – மதுரை மெட்ரோ திட்டத்தை, மக்கள் தொகை 20 லட்சத் திற்குக் குறைவாக உள்ளது என்ற  காரணத்தைக் கூறி மறுத்திருக் கிறார்கள். இது நேர்மையற்ற முடிவு. நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சரிடம் மதுரை விமான நிலையத்தை ஏன் சர்வதேச விமான நிலையமாக மாற்ற மறுக்கிறீர்கள் என்று கேட்டபோது ‘போதிய போக்குவரத்து இல்லை’ என்று கூறினார்.  அதன் தொடர்ச்சியாகத் தான், தற்போது மெட்ரோ ரயில் திட்டமும் மறுக்கப்பட்டுள்ளது. சென்னையின் இரண்டாவது மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மோடி அரசு முதலில் அனுமதி மறுத்தது. அதனை தமிழக முதல்வர் போராடித்தான் பெற்றார். அதுபோல மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தையும் நாம் போராடி பெறுவோம். ‘எடப்பாடி முதலமைச்சரானால் மெட்ரோ ஓடும்’ என்று பாஜக தலைவர் வானதி சீனிவாசன் கூறியிருப்பது நகைச்சுவையானது. எடப்பாடி அவர்களால் ஒரு ஷேர் ஆட்டோ வைக் கூட ஓடச்செய்ய முடியாது.  ஆனால், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி உறுதியுடன் போராடி மெட்ரோ ரயிலை மதுரை, கோவைக்கு கொண்டு வந்தே தீரும்”என்றார்.

ஆக்ரா சுற்றுலா தலம் என்றால் மதுரை சுற்றுலா தலமில்லையா..?

முன்னாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கம் பேசுகையில்: “மதுரை, கோவை நகரங்களில் போக்குவரத்து நெருக்கடி அதி கரித்து வருவதால் மெட்ரோ ரயில் திட்டத்தை தமிழக அரசு கோரி யுள்ளது. அந்த முயற்சியைத்தான் ஒன்றிய அரசு தடுக்கிறது. 20 லட்சம் மக்கள் தொகை இருக்க வேண்டும் என்பது அவர்கள் கூறும் காரணம். ஆனால் 16 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஆக்ரா மற்றும் 20 லட்சத்திற்குக் குறைவான மக்கள் தொகை கொண்ட பாட்னாவில் மெட்ரோ செயல்படுகிறது. ‘20 லட்சம் மக்கள் தொகை விதி’ என்பது  பொய்யான வாதம் என்பதை தீக்கதிர், முரசொலி உள்ளிட்ட பத்திரிகைகள் வெளியிட்டுள்ள தகவல்கள் தெளிவுபடுத்துகின்றன. மதுரை, கோவை ஆகியவை வர லாறு, வணிகம், சுற்றுலா, பாரம்பரியம் ஆகியவற்றின் மையங்கள். ஆக்ரா வில் சுற்றுலா காரணமாக மெட்ரோ  வழங்கப்படுகிறது எனில், மதுரையும்,  கோவையும் அதைவிட பின்தங்கி யவை அல்ல. கீழடி நாகரீகம், மதுரையைச் சுற்றியுள்ள சமணக் குன்றுகள், வரலாற்று ஆதாரங்கள் —  இவை அனைத்தும் மதுரையை உலக புகழ்பெற்ற நகரமாக ஆக்குகின்றன. இத்தகைய நகரத்தை சுற்றுலாத் தலம் அல்ல என்று சொல்லுவது மிகப்பெரிய அறியாமை. மெட்ரோ ரயில் திட்டத்தை நிச்சயம்  தமிழக அரசு போராடிப் பெற்றே தீரும். ஒன்றிய மோடி அரசுக்கு எதிராக தமிழ்நாடு களம் அமைத்து போராடும்,  வெற்றியும் பெறும்” என்று அவர் தெரிவித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.