பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்! சமத்துவத்திற்காகப் போராடுவோம்! - எம்.தனலட்சுமி
7 Mar 2026, 2:36 pm

பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்! சமத்துவத்திற்காகப் போராடுவோம்!

“பட்டங்கள் ஆள்வதும் சட்டங் கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்! எட்டுமறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண்!” - மகாகவி பாரதி. இன்று உலகம் முழுவதும் கொண்டா டப்படும் சர்வதேசப் பெண்கள் தினம் என்பது வெறும் சடங்கல்ல; அது 115 ஆண்டுகளுக்கு முன்பாக உழைப்புச் சுரண்டலுக்கு எதிராகவும், வேலை நேரக் குறைப்பு மற்றும் வாக்குரிமை கோரியும் பெண்கள் நடத்திய வீரமிக்கப் போராட்டங்க ளின் வரலாற்றுத் தொடர்ச்சி. 1910-ஆம் ஆண்டு 17 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற சோசலிசப் பெண்கள் மாநாட்டில், மகளிர் உரிமை செயல்பாட்டாளர் தோழர் கிளாரா ஜெட்கின் மார்ச் 8-ஆம் தேதியைப் பெண்களின் உரிமை தினமாக அனுசரிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார்.

1975-இல் ஐநா சபையும் இதனை அங்கீகரித்தது. சமூக, பொருளாதார மற்றும் அரசியல் தளங்களில் பெண்களின் சாதனைகளைக் கௌரவிக்கும் அதே வேளையில், சமத்துவத்திற்கானப் போராட்டப் பாதையை நாம் இத்தினத்தில் உறுதிப்படுத்த வேண்டும். பெண்களின் சமூக நிலை மற்றும் கல்வி பெண்களுக்குக் கல்வியும் பொருளா தாரச் சுதந்திரமும் அளிப்பதே ஒரு சமூகம் முழுமையான வளர்ச்சியடைய வழிவகுக்கும். நேரு குறிப்பிட்டது போல, பெண்கள் பின்தங்கிய நிலையில் வாழும் எந்த நாடும் முன்னேற முடியாது. ‘அடுப்பூ தும் பெண்களுக்குப் படிப்பெதற்கு’ என்ற நிலை இன்று மாறிவிட்டது. ஒரு பெண் கற்றால் அந்தச் சமூகமே கற்கிறது.

இந்தி யாவில் பெண்களின் கல்வியறிவு 77 சதவீத மாக உயர்ந்துள்ளது. இருப்பினும், இது ஆண்களின் கல்வியறிவு விகிதமான 84.7 சதவீதத்தை விடக் குறைவாகவே உள்ளது. கல்வி அறிவு பெற்றிருந்தாலும், உயர்பதவிகளிலும் முடிவெடுக்கும் இடங்க ளிலும் இன்றும் பெண்களுக்கு முழுமை யான அங்கீகாரம் கிடைக்கவில்லை. பண்பாட்டு ரீதியாகக் கட்டமைக்கப்பட்ட ஆணாதிக்கப் பிம்பங்கள் இன்னும் மாறவில்லை. குடும்பம், சாதி, மதம் என அனைத்தும் ஆண்களுக்கானதாகவே நீடிக்கின்றன.

மகளிர் தினத்தில் மட்டும் பெண்களைக் கொண்டாடினால் போதாது; நாள்தோறும் அனைத்து மட்டங்களிலும் உரிய இடமும் மரியாதையும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். பொருளாதாரப் பங்களிப்பும் குறைத்து மதிப்பிடப்படும் உழைப்பும் தமிழகத்தின் ஏற்றுமதித் தொழிற்சாலை களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்களே. பெண்களின் உழைப்புதான் பொருளாதாரத்தின் அடித்தளமாக உள்ளது. ஆனால், அது எப்போதும் குறை வாகவே மதிப்பிடப்படுகிறது. சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் (ILO) ஆய்வின் படி, இந்தியப் பெண்கள் ஆண்களைவிட பத்து மடங்கு அதிகமான ‘சம்பளமற்ற பராமரிப்புப் பணிகளை’ செய்கின்றனர்.

இது பொருளாதாரக் கணக்கில் எங்கும் இடம் பெறுவதில்லை. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) பெண்க ளின் பங்களிப்பு 18 சதவீதம் என மிகக் குறை வாகக் கணக்கிடப்பட்டுள்ளது. பணிபுரியும் பெண்களில் பெரும்பாலானோர் அமைப்பு சாராத் துறைகளிலும், விவசாயம் மற்றும் வீட்டுப் பராமரிப்புப் பணிகளிலும் குறைந்த ஊதியத்துடனும், பாதுகாப்பற்றச் சூழலிலும் பணியாற்றி வருகின்றனர். அரசியல் அதிகாரமும் சட்டப் பாதுகாப்பும் பெண்கள் வாக்களிக்கும் உரிமை யைப் போராடிப் பெற்றிருந்தாலும், நாடாளு மன்றத்தில் அவர்களின் எண்ணிக்கை வெறும் 14 சதவீதம் (74 பேர்) மட்டுமே. தமிழகச் சட்டமன்றத்தில் 12 பெண் உறுப்பி னர்கள் மட்டுமே உள்ளனர்.

உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு மூலம் பெண்கள் வெற்றி பெற்றாலும், அதிகாரம் பல இடங்களில் ஆண்களிடமே தங்கி யுள்ளது. பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம் (2013), குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் (2005) போன்றவை கொண்டு வரப்பட்டாலும், பணியிடங்களில் உள் புகார் குழுக்கள் (ICC) முறையாக அமைக் கப்படவில்லை. கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் பாலியல் குற்றங்கள் அதி கரித்துள்ளன. தேசியக் குற்ற ஆவணங்கள் பிரிவின் (NCRB) தகவல்படி, இந்தியாவில் பெண்களுக்கு எதிராகத் தினசரி சராசரியாக 1,220 வழக்குகள் பதிவாகின்றன. இதில் பணியிடப் புகார்கள் மட்டும் 422 ஆகும். வெளியில் சொல்லப்படாத குற்றங்கள் இன்னும் ஏராளம்.

திட்டப் பணியாளர்கள் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர்களின் நிலை அங்கன்வாடி, ஆஷா மற்றும் ‘மக்க ளைத் தேடி மருத்துவம்’ போன்ற திட்டங்க ளில் பணியாற்றும் பெண்கள், அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் மகத்தான பணியைச் செய்கி றார்கள். கொரோனா காலகட்டத்தில் உயி ரைப் பணயம் வைத்து அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அங்கன்வாடி ஊழியர்கள், இன்று மற்ற அரசுப் பணிகளையும் பார்க்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப் பட்டுள்ளனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகே அவர்கள் ஒரு மாதக் கோடை விடு முறையைப் பெற்றுள்ளனர். இவர்களின் உழைப்பால்தான் தமிழக அரசுக்கு ஐநா விருது கிடைத்தது. ஆனால், இவர்களின் மாத ஊதியம் வெறும் 5,500 ரூபாய் மட்டுமே.

இவர்கள் இன்னும் ‘அரசு ஊழி யர்கள்’ என அங்கீகரிக்கப்படாமல் ‘தன்னார் வலர்கள்’ என்ற பெயரில் சுரண்டப்படுகின்ற னர். அதேபோல், பட்டாசு, தீப்பெட்டி, பீடி மற்றும் தோட்டத் தொழில்களில் ரசாய னங்கள் மற்றும் அபாயகரமான சூழலில் பணியாற்றும் பெண்களுக்குச் சம ஊதிய மும், மருத்துவ உதவிகளும், பணிப் பாது காப்பும் உறுதி செய்யப்பட வேண்டும். கட்டு மான மற்றும் தையல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் நல வாரியக் குளறுபடிகள் சரி செய்யப்பட வேண்டும். புதிய சவால்களும் சிஐடியு முழக்கங்களும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் பெயரை ‘விபி ஜி ராம் ஜி’ என மாற்றி, நிதியைக் குறைக்கும் போக்கை நாம் வன்மையாக எதிர்க்கிறோம்.

இத்திட்டத்தை மகாத்மா காந்தி பெயரிலேயே தொடரவும், வேலை நாட்களை 200 ஆக உயர்த்தவும் வலியுறுத்துகிறோம். சாலை யோர வியாபாரம், வீட்டு வேலை, பெட்ரோல் பங்க் மற்றும் ஐடி துறைகளில் பணியாற் றும் இளம் பெண்களுக்குப் பாதுகாப்பா னப் பணிச் சூழலும், கழிப்பறை வசதிகளும், மகப்பேறு விடுப்பு மற்றும் தங்குமிட வசதி களும் அவசியமாகும். சுகாதாரப் பணி யாளர்கள் மற்றும் செவிலியர்களுக்குப் பணி நிரந்தரமும், ஊதிய உயர்வும் கிடைக்கப் போராடுவோம். இந்தச் சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தில் சம உரிமை, சம ஊதியம், மகப்பேறு விடுப்பு மற்றும் பாதுகாப்பான பணிச் சூழல் கிடைக்கப்பெற்ற இந்தியாவை உருவாக்க நாம் உறுதி ஏற்போம். இந்தி யாவின் குடியரசு அமைப்பையும், இறை யாண்மையையும் பாதுகாப்போம். ஆணா திக்கத் தடைகளைத் தகர்த்து, சோசலிச சமூக மாற்றத்திற்கானப் போராட்டப் பாதையில் முன்னேறுவோம். நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும் கொண்டு நிலத் தில் யாருக்கும் அஞ்சாமல் ஒன்றுபடு வோம்!