முந்தய பக்கம்

பாரதியின் பெருமையை எட்டுத்திக்கும் கொண்டு சேர்ப்போம் : முதல்வர்!

11 Dec 2025, 3:52 pm
பாரதியின் பெருமையை எட்டுத்திக்கும் கொண்டு  சேர்ப்போம் : முதல்வர்!
<p><strong>பாரதியின் பெருமையை எட்டுத்திக்கும் கொண்டு &nbsp;சேர்ப்போம் : முதல்வர்!</strong></p> <p>சென்னை, டிச. 11 - மகாகவி பாரதியாரின் 144-ஆவது பிறந்த நாளையொட்டி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். &nbsp;அதில், &ldquo;சிந்தனை, சொல், செயல் என அனைத்திலும் புதுமையைப் புகுத்திய பாரதியின் பெருமையை எட்டுத்திக்கும் கொண்டு சேர்ப்போம்&rdquo; என்று &lsquo;எக்ஸ்&rsquo; தளத்தில் குறிப்பிட்டுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்ததும், பாரதி மறைவெய்திய நூற்றாண்டினையொட்டி 14 சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டு செயல்படுத்தி வருவதாகவும், பெண்களின் உயர்கல்விக்கான திட்டத்திற்கு பாரதியின் &nbsp;கவிதையிலிருந்து புதுமைப்பெண் எனப் பெயரிட்டதாக வும் முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும், பாரதியாரின் நினைவுநாளை &lsquo;மகாகவி நாள்&rsquo; என அறிவித்ததையும் முதலமைச்சர் நினைவு கூர்ந்துள்ளார். இந்நிலையில், மெரினா கடற்கரையில் உள்ள பாரதியார் சிலைக்கு, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், இந்து சமயம் மற்றும் அறநிலை யத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram