தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பாஜக - அதிமுக கூட்டணிக்கு தேர்தலில் தக்க பாடம் புகட்டுவோம்!

13 Feb 2026, 3:55 pm
பாஜக - அதிமுக கூட்டணிக்கு தேர்தலில் தக்க பாடம் புகட்டுவோம்!
<p><strong>பாஜக - அதிமுக கூட்டணிக்கு தேர்தலில் தக்க பாடம் புகட்டுவோம்!</strong></p> <p>தொழிலாளர்கள் மத்தியில் உ.வாசுகி பேச்சு விருதுநகர், பிப். 13 - 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழித்துக்கட்ட முயலும் ஒன்றிய பாஜக அரசு மற்றும் அதற்கு துணை போகும் அதிமுகவுக்கு சட்டமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவோம் என்று நூறு நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் சிபிஎம் அரசியல் &nbsp;தலைமைக்குழு உறுப்பினர் உ. வாசுகி அழைப்பு விடுத்தார். விருதுநகர் அருகே உள்ளது &nbsp;சத்திரரெட்டியபட்டி கிராமம். இங்கு &nbsp;ஏராளமானோர் 100 நாள் வேலைத் திட்டமான தேசிய ஊரக வேலை &nbsp;உறுதித் திட்டத்தில் பணியாற்றுகின்ற னர். இந்நிலையில், பிப்ரவரி 13 அன்று &nbsp;அந்த &nbsp;தொழிலாளர்களை, மார்க்சிஸ்ட் &nbsp;கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ. &nbsp;வாசுகி பணியிடத்திற்கே நேரில் &nbsp;சென்று சந்தித்து கலந்துரையாடினார். &nbsp;100 நாள் வேலைத்திட்டம் எவ்வாறு &nbsp;இந்தியாவில் கொண்டுவரப்பட்டது. அதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த பெரும் முயற்சிகள் பற்றி &nbsp;உ. வாசுகி எடுத்துக் கூறினார். இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது ஏற்பட்ட பல்வேறு இடையூறு களை களைவதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எவ்வாறு போராடி யது என்பதையும் பட்டியலிட்டார். 2014-இல் பாஜக ஆட்சிப் பொறுப் புக்கு வந்த பின்னர், 100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியை &nbsp;வெகுவாக குறைத்ததன் காரணமாக - &nbsp;10 ஆண்டுகளில் தொழிலாளர்களுக்கு &nbsp;வேலை இழப்பு ஏற்பட்டது பற்றியும், &nbsp;மறுபுறத்தில் 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். &nbsp;ஊதியத்தை 600 ரூபாயாக உயர்த்த &nbsp;வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையிலேயே, திட்டத் தின் பெயரையே மோடி அரசு மாற்றியதுடன், நிதியையும் வெகு வாக குறைத்து, அதிலும் 40 சதவிகித &nbsp;நிதியை மாநில அரசு தான் வழங்க வேண்டும் என பட்ஜெட்டில் அறி வித்து பாஜக அரசு துரோகம் இழைத் திருப்பதையும் உ. வாசுகி விளக்கி னார். &nbsp; எனவே, &ldquo;100 நாள் வேலைத் திட்டத்தை அடியோடு ஒழித்துக் கட்ட &nbsp;முயற்சிக்கும் ஒன்றிய பாஜக அரசு மற்றும் அதனுடன் கூட்டணி வைத் துள்ள அதிமுகவிற்கும் 2026 சட்ட மன்றத் தேர்தலில் சரியான பாடம் &nbsp;புகட்ட வேண்டும்!&rdquo; என கேட்டுக்கொண் டார். &nbsp;நூறு நாள் வேலைத்திட்ட தொழி லாளர்கள் பேசுகையில், &ldquo;நிச்சயமாக &nbsp;அதிமுக - பாஜக கூட்டணியை வரும் &nbsp;தேர்தலில் முறியடிப்போம்&rdquo; என உறுதி அளித்தனர். &nbsp;தொழிலாளர்கள் உடனான சந்திப்பில் சிபிஎம் மாவட்டச் செயலா ளர் அ. குருசாமி, மூத்த தலைவர் எஸ். &nbsp;பாலசுப்பிரமணியன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் எம். முத்துக்குமார், &nbsp;அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ். பூங்கோதை, மாவட்டச் செயலா ளர் எம். சுந்தரபாண்டியன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.