முந்தய பக்கம்

மெகா வெற்றியை பதிவு செய்வோம்!

4 Apr 2026, 4:02 pm
மெகா வெற்றியை பதிவு செய்வோம்!
<p><strong>மெகா வெற்றியை பதிவு செய்வோம்!</strong></p> <p>நாமக்கல், ஏப். 4- நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில் திமுக தலை மையிலான கூட்டணி கட்சி களின் ஒற்றுமையும், அடி மட்ட அளவிலான தொண்டர் களின் வலிமையும், திமுக அரசின் சாதனைகள் இந்த தேர்தலில் மெகா வெற்றியை தேடித்தரும் என மாநிலங்க ளவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஷ்குமார் எம்.பி. தெரிவித்தார். தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், நாமக்கல் - சேலம் சாலையில், திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் &nbsp;பணிமனை திறப்பு விழா வெள்ளியன்று நடை பெற்றது. இந்த விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஷ்குமார் கலந்து கொண்டு, தேர்தல் பணிமனையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ் வில் நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன், கூட்டணி கட்சிகளின் தலை வர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் திரளா னோர் பங்கேற்றனர். இதனைத்தொடர்ந்து, செய்தியாளர் களை சந்தித்து கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் கூறுகையில், &rdquo;நாமக்கல் எப்போதும் திமுக வின் கோட்டை. தற்போது அறிவிக்கப்பட் டுள்ள வேட்பாளர் ராணி, நகராட்சி உறுப் பினர், ஊராட்சித் தலைவர், ஒன்றியக்குழு தலைவர் என பல்வேறு நிலைகளில் மக்கள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். எங் கள் கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே மிகுந்த ஒற்றுமை நிலவுகிறது. அடிமட்ட அள வில் வலுவாக உள்ள எங்களது கட்டமைப்பு இந்தத் தேர்தலில் பெரும் பலமாக அமையும். அதே வேளையில், எதிர்க்கட்சிகள் களத்தில் மிகவும் பலவீனமாக உள்ளன. அவர்களுக்கு &nbsp;மக்களிடையே எவ்வித ஆதரவும் இல்லை. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை யிலான அரசின் மகத்தான நலத்திட்டங்க ளும், வளர்ச்சிப் பணிகளும் ஒவ்வொரு வீட் டையும் சென்றடைந்துள்ளது. எனவே, இந்த தேர்தலில் நாமக்கல் சட்டமன்றத் தொகுதி யில் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி, என்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram