தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருப்பரங்குன்றத்தின் மத நல்லிணக்கப் பாரம்பரியத்தைப் பாதுகாப்போம்! மாதர் சங்கம் பிரச்சார நடைபயணம்; போலீஸ் அனுமதி மறுப்பு - கைது!

27 Dec 2025, 4:17 pm
திருப்பரங்குன்றத்தின் மத நல்லிணக்கப் பாரம்பரியத்தைப் பாதுகாப்போம்! மாதர் சங்கம் பிரச்சார நடைபயணம்; போலீஸ் அனுமதி மறுப்பு - கைது!
<p><strong>திருப்பரங்குன்றத்தின் மத நல்லிணக்கப் பாரம்பரியத்தைப் பாதுகாப்போம்! மாதர் சங்கம் பிரச்சார நடைபயணம்; போலீஸ் அனுமதி மறுப்பு - கைது!</strong></p> <p>மதுரை, டிச. 27 - &ldquo;மத நல்லிணக்கம் காப் போம்; மக்கள் ஒற்றுமை பாது காப்போம்&rdquo; என்ற முழக்கத்தை முன்வைத்து, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், மத நல்லிணக்கப் பிரச்சார நடை பயணம் மேற்கொண்டனர். ஹார்விபட்டி கலையரங்கம் முதல் திருநகர் 2-ஆவது பேருந்து நிறுத்தம் வரை பிரச்சார நடை பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. இதன்படி மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் என். விஜயா &nbsp;தலைமையில், சனிக்கிழமை யன்று மாலை 4 மணிக்கு மாதர் சங்கத்தினர் நூற்றுக்கும் மேற் பட்டோர் ஹார்விபட்டியில் கூடினர். அவர்கள், நடைபயணத்தை துவங்கிய நிலையில், அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறி &nbsp;காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு மாதர் &nbsp;சங்கத் தலைவர்கள் தங்களின் &nbsp;அதிருப்ருதியை வெளிப்படுத்தினர். கார்த்திகை தீபம் விவகாரத் தில், மதவெறியர்களின் அராஜ கத்தை முறியடித்து, அமைதியை நிலைநாட்டிய காவல்துறையின் நடவடிக்கையை மாதர் சங்கம் பாராட்டுகிறது; அதேநேரம் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் நடைப்பயணத்திற்கு அனுமதி மறுப்பது; அதிலும் திடீரென அனு மதி மறுப்பது, சரியல்ல என்றனர். அத்துடன், திட்டமிட்டபடி நடைபயணத்தைத் துவங்கினர். மாதர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் அ. ராதிகா, &nbsp;மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. &nbsp;பாலபாரதி, எஸ்.கே. பொன்னுத் தாய், புறநகர் மாவட்டச் செயலா ளர் எஸ். சரஸ்வதி, மாவட்டப் &nbsp;பொருளாளர் ஏ. சுமதி, துணைத் &nbsp;தலைவர் கே.பிரேமலதா, துணைச் செயலாளர் எம். ஜான்சி, மாவட் &nbsp;டக்குழு உறுப்பினர் கே. பிருந்தா &nbsp;உள்ளிட்ட 200-க்கும் மேற்பட் டோர் மதநல்லிணக்க முழக்கங் &nbsp;களை எழுப்பியபடி கிளம்பினர். &nbsp;ஆனால், அவர்கள் அனைவரை யும் நடைபயணத்தைத் தொடராத படி தடுத்து போலீசார் கைது செய்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.