தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பிப்.12 வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வோம்!

3 Feb 2026, 4:00 pm
பிப்.12 வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வோம்!
<p><strong>பிப்.12 வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வோம்!</strong></p> <p>சென்னை, பிப்.3 - பிப்ரவரி 12 பொது வேலைநிறுத்தத் தை வெற்றி பெறச் செய்ய அனைத்து வெகுஜன அமைப்புகள் அறைகூவல் விடுத்துள்ளன. &nbsp;இதுகுறித்து இந்திய தொழிற்சங்க மையம், அகில இந்திய விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம், &nbsp;அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் தமிழ்நாடு அனைத்து வகை &nbsp;மாற்றுத்திறனாளிகள் சங்கம் ஆகியவற்றின் &nbsp;மாநில பொதுச் செயலாளர்கள் எஸ். கண்ணன், சாமி.நடராஜன், வீ.அமிர்தலிங்கம், &nbsp;அ.ராதிகா, எஸ்.கார்த்திக், தௌ.சம்சீர் அகமது, பி.சுகந்தி, பா.ஜான்சிராணி ஆகி யோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக் கையில்,&ldquo; அகில இந்திய அளவில் மத்திய தொழிற்சங்கங்கள், சம்மேள னங்கள் மற்றும் சம்யுக்த கிசான் &nbsp;மோர்ச்சா ஆகிய அமைப்புகளின் கூட்டு முயற்சியின் காரணமாக, ஒன்றிய &nbsp;பாஜக அரசின் தொழிலாளர்கள், விவசா யிகள், விவசாயத் தொழிலாளர்கள் விரோதச் சட்டங்களுக்கு எதிராக, &nbsp;பிப்ரவரி 12 அகில இந்திய பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வேலை நிறுத்தத்தை வெகுஜன அமைப்புகள் ஆதரிக்கின்றன. பிப்.10 ஆம் தேதி வரை பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்து துண்டு பிரசுரம் விநியோகித்து அனைத்து மக்களிடமும் பிரச்சாரம் செய்வது, பிப்.12 அன்று மாநிலம் முழுவதும், மத்தியத் தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஆகி யோர் இணைந்து ரயில் மறியல், ஒன்றிய அரசு நிறுவனங்கள் முன்பு மறியல் &nbsp;போராட்டம் நடத்துவது, துண்டு பிரசு ரங்கள் மற்றும் சுவரொட்டிகளை வெளி யிடுவது உள்ளிட்ட முடிவுகளை அமலாக் கிட, மாவட்ட அளவில் அனைத்து அமைப்பு &nbsp;களும் இணைந்து திட்டமிடவேண்டும். ஒன்றிய மோடி அரசு சமீபத்தில் கொண்டு வந்த பல்வேறு சட்டங்கள் மற்றும் மசோதாக்கள் மூலம் இந்திய தொழிலாளர்கள், விவசாயிகள், விவசா யத் தொழிலாளர்கள் மீது தாக்குதலை &nbsp;நடத்தி வருகிறது. எனவே, அனைத்து வெகுஜன அமைப்புகளும், பிப்.12 பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை &nbsp;வெற்றி பெறச் செய்வதற்கான பணிகளை &nbsp;ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டும்&rdquo; என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.