பிப்.12 பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம் ! திருச்சியில் நாளை பிரம்மாண்ட ஆயத்த மாநாடு
22 Jan 2026, 2:57 pm
<p><strong>பிப்.12 பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம் ! திருச்சியில் நாளை பிரம்மாண்ட ஆயத்த மாநாடு</strong></p>
<p>சென்னை, ஜன.22- ஒன்றிய மோடி அரசின் தொழிலாளர் மற்றும் விவசாய விரோதக் கொள்கை களைக் கண்டித்து பிப்ரவரி 12-ஆம் தேதி நடைபெறவுள்ள நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை தமிழகத்தில் வெற்றிகரமாக நடத்து வதற்கான ஆயத்த மாநாடு வரும் ஜன வரி 23 அன்று திருச்சியில் நடைபெறுகிறது. கடந்த 2025 டிசம்பர் 22-ஆம் தேதி தலைநகர் தில்லியில் கூடிய மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில்வாரி சம்மேளனங்களின் தேசிய மாநாடு, பிப்ரவரி 12-ஆம் தேதி பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த அறைகூவல் விடுத்தது. இதன் தொடர்ச்சியாகத் தமிழகத்தில் எல்பிஎப், சிஐடியு, ஏஐடியுசி, எச்எம்எஸ், ஐஎன்டி யுசி, ஏஐசிசிடியு, ஏஐயுடியுசி, யுடியுசி ஆகிய மத்திய தொழிற்சங்கங்களும், உழைக்கும் மக்கள் மாமன்றம், தொழிலாளர் விடுதலை முன்னணி, மறுமலர்ச்சி தொழிலாளர் பேரவை உள்ளிட்ட மாநில தொழிற்சங்கங்களும் இணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கின்றன. தொழிலாளர்கள் மத்தியில் விரிவான பிரச்சாரத்தை மேற்கொள்வது என்றும், அனைத்து தொழில் நிறுவனங்களிலும் சட்டப்படியான வேலைநிறுத்த அறிவிக்கை வழங்குவது என்றும் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. இதற்கான மாநில அளவிலான ஆயத்த மாநாடு வரும் ஜனவரி 23-ஆம் தேதி மாலை 3 மணியளவில் திருச்சி உழவர் சந்தை திடலில் நடைபெற வுள்ளது. இந்த மாநாட்டில் எல்பிஎப் சார்பில் கி.நடராஜன், சிஐடியு சார்பில் அ.சவுந்தரராசன், ஏஐடியுசி சார்பில் டி.எம்.மூர்த்தி, எச்எம்எஸ் சார்பில் மு.சுப்பிரமணி, ஐஎன்டியுசி சார்பில் டி.வி.சேவியர், ஏஐசிசிடியு சார்பில் க.ஞானதேசிகன், யுடியுசி சார்பில் அ.சேக்கிழார், ஏஐயுடியுசி சார்பில் வி.சிவகுமார் மற்றும் டியுசிசி சார்பில் எஸ்.மாயாண்டி உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கத் தலைவர்கள் உரை யாற்றுகின்றனர். மேலும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் க.பாலகிருஷ்ணன், எல்எல்எப் சார்பில் க.பேரறிவாளன், உ.ம.மா சார்பில் சம்பத், எம்எல்எப் சார்பில் இரா.அந்திரிதாஸ் ஆகிய மாநிலத் தொழிற் சங்கத் தலைவர்களும் உரையாற்று கின்றனர். இவர்களுடன் வங்கி, காப்பீடு, பாதுகாப்புத் துறை மற்றும் அரசு ஊழியர் - ஆசிரியர் அமைப்புகளின் தலை வர்களும் பெருந்திரளாகப் பங்கேற் கின்றனர் என சிஐடியு மாநிலப் பொதுச்செயலாளர் எஸ். கண்ணன் தெரிவித்துள்ளார்.</p>
