மக்கள் ஒற்றுமை காப்போம்!
20 Dec 2025, 2:23 pm

‘மக்கள் ஒற்றுமை காப்போம்!’

மதுரையில் சிபிஎம் பிரச்சாரம்

மதுரை, டிச.20- ‘மத நல்லிணக்கம் காப்போம்; மக் கள் ஒற்றுமை காப்போம்’ என்ற முழக் கத்தை முன்வைத்து, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் மதுரையில் பிரச்சார இயக்கம் துவங்கியது. திருப்பரங்குன்றம் மற்றும் மதுரை மக்களின் மத நல்லிணக்கப் பாரம்பரி யம் பலராலும் பாராட்டப்படுவதாகும். ஆனால், அந்தப் பாரம்பரியத்தையும், மக்கள் ஒற்றுமையையும் குலைக்கும் கலவர நடவடிக்கைகளில், பாஜக, இந்து முன்னணி, இந்து தமிழர் கட்சி உள்ளிட்ட ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள் இறங்கியுள்ளன. இந்நிலையில், அவர்களின் மத வெறிக்கு, மதுரை மக்கள் ஒருபோதும் இரையாகமாட்டார்கள்; பக்தியின் பெயரைச் சொல்லி வகுப்புவாத வன் முறையைத் தூண்டும் சங்-பரிவாரங் களை மதுரை மக்கள் முறியடிப்பார்கள்; மதுரை மண்ணில் மதவெறிக்கு இட மில்லை; என்ற வகையில், ‘மத நல்லி ணக்கம் காப்போம்; மக்கள் ஒற்றுமை காப்போம்!’ என்ற துண்டறிக்கை பிரச் சார இயக்கத்தை, டிசம்பர் 20, 21 தேதி களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்துகிறது. இந்த பிரச்சார இயக்கத்தை, மதுரை மேற்கு ஒன்றியம் பரவையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் துவக்கி வைத்தார். பரவை காந்தி சிலை யிலிருந்து துவங்கி பரவை மெயின் ரோடு வரையிலுள்ள கடைவீதியில் வியாபாரிகள் மற்றும் பகுதி பொதுமக்க ளிடம் பெ.சண்முகம் துண்டறிக்கை களை வழங்கினார். அப்போது, மதச்சார் பற்ற பாரம்பரியமிக்க மதுரை மக்கள் ஒருபோதும் மதவெறி அரசியலுக்கு இடம்தர மாட்டார்கள் என்று பெ. சண்முகம் தெரிவித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல் ராஜ், புறநகர் மாவட்டச் செய லாளர் கே.ராஜேந்திரன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலா, ஒன்றியச் செயலாளர் ம.தனபாலன் மற்றும் மாவட் டச் செயற்குழு - மாவட்டக்குழு உறுப்பி னர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.