தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பகத்சிங்கின் புரட்சிப் பாரம்பரியத்தைப் போற்றுவோம்! மதுரையில் நவஜவான் பாரத் சபா நூற்றாண்டு விழா எழுச்சி!

23 Feb 2026, 5:35 pm
பகத்சிங்கின் புரட்சிப் பாரம்பரியத்தைப் போற்றுவோம்! மதுரையில் நவஜவான் பாரத் சபா நூற்றாண்டு விழா எழுச்சி!
<p><strong>பகத்சிங்கின் புரட்சிப் பாரம்பரியத்தைப் போற்றுவோம்! மதுரையில் நவஜவான் பாரத் சபா நூற்றாண்டு விழா எழுச்சி!</strong></p> <p>மதுரை, பிப்.23 - &ldquo;இந்தியாவின் விடுதலை என்பது &nbsp;வெறும் ஆட்சி மாற்றம் மட்டுமல்ல, அது சுரண்டலற்ற சோசலிச சமூக மாற்றமாக இருக்க வேண்டும் என்ற பகத்சிங்கின் கனவை நனவாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்&rdquo; என்று மதுரையில் நடைபெற்ற நவஜவான் பாரத் சபா நூற்றாண்டு விழா &nbsp;துவக்க நிகழ்ச்சியில் தலைவர்கள் முழங்கினர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு மற்றும் மதுரை மாநகர் மாவட்டக் குழு &nbsp;சார்பில், மாவீரன் பகத்சிங் உருவாக்கிய &nbsp;&lsquo;நவஜவான் பாரத் சபா&rsquo; அமைப்பின் &nbsp;நூற்றாண்டு விழா துவக்க நிகழ்ச்சி &nbsp;ஞாயிற்றுக்கிழமை பெத்தானியா புரத்தில் நடைபெற்றது. மாநிலத் தலை வர் செல்வராஜ் தலைமையில் நடை பெற்ற இந்த விழாவில், அரசியல் மற்றும் சமூக மாற்றத்திற்கான பல்வேறு &nbsp;முக்கியக் கருத்துக்கள் முன்வைக்கப் பட்டன. மன்னிப்புக் கடிதங்களின் வரலாறு நமக்குத் தேவையில்லை: &nbsp;ஏ.ஏ.ரஹீம் எம்.பி., வாலிபர் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் ஏ.ஏ.ரஹீம் எம்.பி &nbsp;சிறப்புரையாற்றுகையில், &ldquo;இன்று நாம் எதிர்கொள்வது வேறொரு வடிவத் திலான ஏகாதிபத்திய ஆதிக்கம். நாட்டின் இறையாண்மை குறித்த முடி வுகள் வெளிநாட்டு அதிகார மையங் களால் தீர்மானிக்கப்படும் அவலம் நிலவுகிறது. பகத்சிங், ராஜகுரு, சுக தேவ் போன்ற மாவீரர்களின் வரலாறு என்பது மன்னிப்புக் கடிதங்களின் &nbsp;வரலாறு அல்ல; அது போராடி உயிர் &nbsp;தியாகம் செய்த வீர வரலாறு&rdquo; என்றார். மேலும், இன்றைய இளைஞர்கள் இஎம்ஐ (EMI), சிபில் ஸ்கோர் (CIBIL) &nbsp;போன்ற பொருளாதாரச் சுழலில் &nbsp;சிக்கியிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், &ldquo;வேலைகள் ஒப்பந்தமயமாக்கல் &nbsp;அதிகரிப்பது சமூக நீதிக்கு எதிரா னது. அக்னிவீர் போன்ற திட்டங்கள் &nbsp;நிரந்தரப் பணிகளை அழித்து, இட ஒதுக்கீட்டை அர்த்தமற்றதாக்குகின்றன. &nbsp;சாதி-மத வெறிக்கு எதிராக &lsquo;ஒன்றே சாதி, ஒன்றே மதம் - அது மனித சாதி&rsquo; &nbsp;என்ற முழக்கத்துடன் நாம் ஒன்றிணைய &nbsp;வேண்டும்&rdquo; என அறைகூவல் விடுத்தார். அறிவியலைச் சிதைக்கும் பிற்போக்குத்தனம்: &nbsp;ஆர். சச்சிதானந்தம் எம்.பி., திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப் பினர் ஆர். சச்சிதானந்தம் பேசுகை யில், &ldquo;பகத்சிங் இளைஞர்களைச் சோச லிசப் பாதையில் ஒன்றிணைத்தார். ஆனால் இன்று மத்தியிலுள்ள பாஜக &nbsp;அரசு, கல்வித் துறையில் அறிவிய லுக்குப் புறம்பான மூடநம்பிக்கை களைப் புகுத்தி வருகிறது. பிளாஸ்டிக் &nbsp;அறுவை சிகிச்சை பழங்காலத்திலேயே &nbsp;இருந்ததாகக் கூறுவதும், வரலாற்றைத் &nbsp;திரிப்பதும் வளர்ச்சியைப் பின் னோக்கித் தள்ளும் செயல்கள். விலை வாசி உயர்வு, வேலையின்மை போன்ற உண்மைப் பிரச்சினைகளைப் பேசாமல், மத உணர்ச்சிகளைத் தூண்டி &nbsp;மக்களைப் பிளவுபடுத்தும் அரசியலை &nbsp;நாம் முறியடிக்க வேண்டும்&rdquo; என்றார். சோசலிச இந்தியாவே நமது இலக்கு: எஸ்.கார்த்திக் மாநிலச் செயலாளர் எஸ். கார்த்திக் &nbsp;பேசுகையில், &ldquo;1926-ல் தொடங்கப்பட்ட &nbsp;நவஜவான் பாரத் சபா, இந்தியாவிற்கு முழுமையான சுதந்திரம் வேண்டும் என்று முதன்முதலில் உரக்கச் சொன் னது. 1925-ல் தொடங்கிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு விடுதலைப் போராட்டத்தில் எந்தப் பங்கும் இல்லை. &nbsp;ஆனால், பகத்சிங்கின் வாரிசுகளான நாம், &lsquo;பாலுக்கு அழும் குழந்தை, வேலைக்காக ஏங்கும் மாணவன் இல்லாத&rsquo; இந்தியாவை உருவாக்கப் போராடுகிறோம். கல்வி மற்றும் வேலையை அடிப்படை உரிமை யாக்க வாலிபர் சங்கம் தனது போராட் டத்தைத் தொடரும்&rdquo; எனத் தெரிவித்தார். கலை நிகழ்ச்சிகள் மற்றும் கௌரவிப்பு முன்னதாக, மாநிலத் துணைத் தலைவர் டி. செல்வா வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் முன்னாள் சோசலிஸ்ட் வாலிபர் முன்னணியின் தலைவர் ஏ.சி. அனந்தன் மற்றும் &nbsp;விளையாட்டுக் கழக ஒருங்கிணைப்பா ளர் பால்ச்சாமி ஆகியோர் கௌர விக்கப்பட்டனர். சுடர் தப்பட்டாக் குழுவின் கலை நிகழ்ச்சிகள், வாலிபர் &nbsp;சங்க சிலம்பப் பள்ளி மாணவர்களின் சிலம்பாட்டம் மற்றும் புரட்சிகரப் பாடல் கள் மாநாட்டிற்கு எழுச்சியூட்டின. மதுரை புறநகர், சிவகங்கை, விருது நகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட &nbsp;நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான &nbsp;இளைஞர்கள் இதில் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர் எஸ். வேல் தேவா நன்றி கூறினார். &nbsp;&nbsp; &nbsp; (ந.நி)</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.